உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


தது. அதை உறுதிப்படுத்திய விதத்தில் அவள் பேச்சு இருந்தது. அவள் ஊர்ஜிதம் செய்யாத விஷயங்களில் தீர்ப்பு வழங்கியதாக அவளது முக பாவம் இருந்தது. பல ஹீனமான, மெலிந்த தன் அத்தையை அவன் பெரிதும் போற்றினன். தன் சேவையைத் தொடர்ந்து செய்ய அவள் தங்கியது, மற்றவர்கள் வெளியேறியும்கூட, அவள் புறப்பட மறுத்தது-தான் நல்லதையே செய்ததாகவும், தான் செய்தது சரியே என்றும் உணர்ந்து புறப்பட மறுத்தது போன்ற செய்கைகள் அவனுக்குப் பிடித்திருந்தன. தனிப் பட்டவர்களிடம் தனக்கு இருந்த நம்பிக்கையையும் அவர்களுக்காக தான் அடைந்த கவலையையும் புலப் படுத்தினுள். சீன மக்கள் பின்பற்றத் தொடங்கி யிருந்த புதிய கொள்கை-கோட்பாடுகளுக்கு விரோத மாக அவள் நம்பிக்கை வலுத்தது. அதனல் அவளை வெளியேற்ற துணிந்தனர், அவள் மனக்கசப்பின்றி அதை ஏற்றுக்கொண்டுவிட்டாள் என்பது அவளது அசாத்திய துணிவையே அதாவது தளரா உறுதி யையே குறிக்கிறது. 'அத்தை, எனக்காக ஒரு உதவி செய்வீர்களா? ரொம்பவும் முக்கியமானது. எல்லைப் பகுதியின் வழிகளை நன்ருகத் தெரிந்து வைத்துள்ள வழிகாட்டி கள் சிலர் இருக்கிருர்கள். அவர்களுக்குக் கூலி உண்டு. தொடக்கத்தில் பாதிப்பணமும் எல்லையைத் தாண்டிய பிற்பாடு பாதிப்பணமும் கொடுக்க வேண் டும், இது நிரந்தரமானதொரு வியாபாரமாகவே ரகசியமாய் நடக்கிறது. நீங்கள் நினைப்பது மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/60&oldid=1274834" இலிருந்து மீள்விக்கப்பட்டது