உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அத்தியாயம் 3. வேய்ச்சோ நகரத்தில் மேலெழுந்தவாரியாக நிலவிய அமைதி ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருந்தது. முந்தின நாளில் அவன் வந்து இறங்கிய ரயில்வே ஸ்டேஷனுக்குக் காலால் நடந்து சென்ற அந்தப்பத்து நிமிஷ நடையை நினைவுபடுத்திக் கொண்டான் ஜேம்ஸ். தற்செயலாகப் புறப்பட்ட உல்லாசப் பிரயாணியென அவன் வந்திருந்தான்; குறிப்பிட்டுச் செய்யக்கூடிய வேலை ஒன்றுமில்லை; கடைகளிலே நின்று அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த சாமான் களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்; எல்லோ ரது கவனத்தையும் தான் கவர்ந்து கொண்டிருந் ததையும் அவன் உணராமல் இல்லை. ஜனங்கள் சிநேகபாவமாக இருந்தனர். சில குழந்தைகள் மட்டும் அவனைச் சுற்றித் திரிந்து கொண்டும், அவ னுடன் பேசுவதற்கு முயன்று கொண்டும் இருந்தன. ரயில் நிலையத்தில் வியாபாரிகள், குடியானவர் கள் அவர்களின் மனைவிமார்கள் எங்கேயோ போவ தற்கு ரயிலேறிக் கொண்டிருந்த பலவகை அணி களைச் சார்ந்த படை வீரர்கள் முதலானவர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/63&oldid=753141" இலிருந்து மீள்விக்கப்பட்டது