உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


கூட்டத்தை அவன் கண்டான். ஜனங்கள் க்யூ'வில் நின்ருர்கள்; கால்களைப் பரப்பியபடி சிறு குழந்தை களை முதுகுப் புறங்களில் வைத்துக் கொண்டிருந் தார்கள் பெண்கள்; ஏழை உழவர்கள் விசித்திர மான மூட்டை முடிச்சு வகைகள், பைகள், கூடைகள் ஆகியவற்றுடன் நின்ருர்கள், டிக்கெட் ஆபீஸ் திறப்பதை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அந்த இடத்தில் தானியக் களஞ்சியத்தின் வாசனை அடித் தது; அல்லது விவசாயப் பண்ணையின் மணம் வீசியது. சாமான்கள் எல்லாம் வரிசைப்படி க்யூவில் அடுக்கி வைக்கப்படுவதற்கு அந்த இடம் உபயோகிக் கப்பட்டதென்பதை அவன் புரிந்துகொண்டான். ஜனங்களின் அமைதியான ஒழுங்கு அவனை வருத் திற்று. ஸ்டாலின், மா ஆகியவர்களின் பூதாகார மான ஒவியங்களைத் தவிர, சுவர்களிலே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த கடந்தபத்தாண்டு களின் உற்பத்தி அளவுகளின் அட்டவணைகள், வரைப்படங்கள் ஆகியவையும் இருந்தன, ரயில், பஸ் ஆகியவற்றின் கால அட்டவணைகளும் வெகு எடுப்பாக அமைக்கப்பட்டிருந்தன. நகர வீதிகள், மாகாணத்தின் செய்திப் போக்குவரத்துக்குரிய பிரதான வழிகள், புதிய நிர்வாகப் பகுதிகளைப்பற் றிய கவனமான-விரிவான குறிப்புக்கள் அடங்கிய பெரிய தேசப்படம் ஒன்றும் இருந்தது. அதிகார வர்க்க ஆட்சி முறையின் ஒரு புதிய பாணிக்கு இவை யெல்லாம் ஆதாரம் முழங்கால்களின் அளவுக் குள்ள ஒரு வகையான கால் சட்டைகளையே அநேக ஜனங்கள் போட்டுக் கொண்டிருந்ததை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/64&oldid=1274836" இலிருந்து மீள்விக்கப்பட்டது