பக்கம்:இலட்சிய பூமி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


கவனித்தான். காரணம்: துணிப் பற்ருக்குறை! அவனுடைய உயர்ந்த தோல் காலணிகள், பெருமை மிகுந்த பலரது பார்வைகளை ஆகர்ஷித்தன! சுவரில் இருந்த தேசப்படத்தை அவன் ஆராய்ந்து கொண்டிருக்கையில், அந்தப் பெரிய ஹாலில் திடுதிப்பென்று அமைதி நிலவியது. பன்னி ரண்டு அல்லது பதினைந்து இராணுவ வீரர்கள், கை விலங்கு பூட்டப்பட்ட ஆறு ஏழு குடியானவர்களே ரெயில் பிளாட்டாரத்துக்கு வழிகாட்டி அழைத்துச் சென்ருர்கள். கூட்டத்தினர் அமைதியான அச்சத் துடன் கவனித்தார்கள். வயதான பெண் ஒருத்தி முன்னல் ஓடிவந்தாள். வெளிநாட்டுக்கு அனுப்பப் பட்ட கைதிகளில் ஒருவனுக்கு கைகளை அசைத்து நம்பிக்கையற்றவர்களாக விடை கொடுத்தாள். பிறகு அடக்க முடியாத துன்பத்தால் கூக்குர விட்டுக் கதறினுள். போலீஸ்காரன் ஒருவன் அவளை அமைதியுடன் வெளியே அழைத்துப் போனன். கைதிகள் அனுப்பப்பட்டிருந்த இடம் மஞ்சூரியாவா, அல்லது டர்க்கிஸ்டான அல்லது ஹாய்னன என்ற ஊகப்பேச்சில் கூட்டத்தினர் ஈடுபட்டனர். ஆனல் இம்மனிதர்கள் மீண்டும் வீடு நோக்கித் திரும்பி வரவே மாட்டார்கள் என்னும் முடிவை அவர்கள் ஒப்புக்கொண்டதாகத் தோன்றியது. அவர்களிலே சிலர் கொகொனேரைச் சேர்ந்த பயங்கரமான உப்புச் சதுப்பு நிலங்களைச் சீர்படுத்த அனுப்பப்பட் டிருக்க வேண்டும். குற்றவாளிகளென்று தீர்மானிக் கப்பட்ட தொழிலாளர்களில் நூற்றுக்குத் தொண் னூறு பேர் அங்கு சென்று இறந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/65&oldid=1274837" இலிருந்து மீள்விக்கப்பட்டது