உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ויל "சரிதான்; தன்னுடைய இரண்டுபிள்ளைகளுடன் வெளியே தப்ப நீங்கள் உதவியதாக மிஸ்டர் ஹகுவாங்சியூபா சொன்னர்.” "ஓஹோ மிஸ்டர் ஹவாங்சியூபா சொன் னரா? ஆமாம், உண்மைதான்!” ஃபானின் முகத்தில் புன்னகை தோன்றியது. பின்புறம் சாய்ந்து, வசதி யாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். "உங்களிடம் சிகரெட் இருக்கிறதா?” ”நாம் இங்கே புகை பிடிக்கலாமா?” ஜேம்ஸ் தயங்கியவாறு கேட்டான். "அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை!" அவன் குரலில் ஒரு கெளரவம் இருந்ததை ஜேம்ஸ் கவனித்தான். சிகரெட் பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டினன். ஃபான் ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டான்; அதை வாயில் பொருத்து முன் ஆவலுடன் கையாண்டான். 'தயவு செய்து நெருப்பு தாருங்கள்.” ஜேம்ஸ் கொளுத்திய தீக்குச்சியை அவன் வசம் நீட்டினன். ஃபான் ஆவலுடன் புகையை இழுத் தான். ஆர்வமும் திருப்தியும் மிகுந்த அவனுடைய நாசித் துவாரங்கள் சுருங்கி விரிந்தன. “கொடிய புகையிலே களே ப் புகைப்பதற்கு நாங்கள் கட்டாயப் படுத்தப்படுவதையும் சேர்த்து, அடிமைப்பட்டிருக்கும் ஒரு மனிதன் அடையும் அவமானங்களை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்!” ஃபான், மான்டரின் மொழிக்குத் திரும்பினன்; சிறந்த உச்சரிப்புடன் பேசினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/77&oldid=753156" இலிருந்து மீள்விக்கப்பட்டது