பக்கம்:இலட்சிய பூமி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*8 சிகரெட்டிலிருந்து முழு அளவு ஆனந்தத்தை ஃபான் அனுபவித்துக் கொண்டிருந்தான். ஜேம்ஸ் இதை உன்னிப்புடன் கவனித்தான். அவனுடைய முதல் சிந்தனையில், ஃபான் ஒரு விநோதமான ஆளாகத் தோற்றமளித்தான். பழுப்பு நிறமுள்ள அவலட்சணமான கையுள்ள மேலங்கியும் கிழிந்த கறுப்புக் கால்சட்டையும் ஃபானுடைய முகத் துக்கோ அல்லது அவனுடைய பாஷை உச்சரிப் புக்கோ பொருந்தவில்லை. ஜரிகையால் ஆன சித்திர வேலைப்பாடுகள் கொண்டிருந்த கைகளுடன் அங்கு மிங்கும் ஆடி அசைத்துகொண்டிருந்த நீண்ட பட்டு மேலங்கியை அணிந்து, வெண்ணிறக் கரங்களில் வெள்ளைத் தாமிரத்தாலான புகைக் குழாயையும் பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு மேன்மகனுடன் தான் பேசிக்கொண்டிருப்பதாகவே அவன் கற்பனை செய்து பார்த்துக்கொண்டான். ஃபான் போட் டிருந்த துணிச் செருப்புகளைக் கவனிக்காமலிருக்க எத்தனம் செய்தான். பொருத்தமற்ற தன்மை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. 'எல்லையைக் கடப்பதற்கு அவளுக்கு நீங்கள் உதவி செய்யத் தயாராக இருப்பதாக நான் நம்பு கிறேன்." ஜேம்ஸ் தலையை அசைத்தான் இணக்கத்துடன். 'நீங்களும் செல்ல விருப்பப்படாமல் இருந்தால், காரியம் இன்னும் சுலபமாகிவிடும். நீங்கள் வெள்னையர் ஆனதால். உங்களை எளிதில் இனம் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனல் அப்படி ஒரு போதும் நடந்ததில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/78&oldid=753157" இலிருந்து மீள்விக்கப்பட்டது