உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


"அப்படியென்ருல்முதல்தடவையாக அ ைத நான் செய்கிறேன்!” என்ருன் ஜேம்ஸ், ஆங்கிலேயர்க் குரிய அடக்கத்துடன். உங்கள் காதலியைத் தப்பிக்கச் செய்வது மட்டுமே உங்களது விருப்பமானல், அதற்குரிய ஒரு வழி, அவளைக் காண்டனுக்குக் கப்பலேற்றிவிட்டு அதன்பின் அவளை வாக்கோவுக்கு ஆற்றின் வழியே அனுப்பிளிடுவதுதான்!” “அவள் தன்னந்தனியாகவே போகவேண்டு வென்று நீங்கள் சொல்கிறீர்களா?' 'ஆம் அதுதான் சிக்கல் இல்லாதது!” "ஆனால், அவ்வாறு நடக்க நான் ஒப்பமாட் டேன். அபாயகரமான அ ச் .ெ ச ய லி ல் அவளை மாத்திரம் தனியே ஈடுபடுத்த எனக்கு விருப்பம் இல்லை. எனக்குப் பயண அனுமதிச் சீட்டு இல்லை; கான்டனில் நான் ஊடாடுவதற்குரிய தக்க காரண மும் இல்லை. படகில் அவள் மறைந்து சென்ருல் முதலில் கம்யூனிஸ்ட் ரோந்துப் படகுகள் அவளைச் சுட்டுவிடும்; பிறகு, கடலில் பிரிட்டனுக்குரிய ரோந் துப் படகுகள் ஒருவேளை அவளைச் சுட்டுவிடக்கூடும்." 'ஆதலால் மலைகளைக் கடந்து செல்லவே நீக்கள் விரும்புகிறீர்களா?” என்று துருவினன் ஃபான். "ஆம்; என்னை நான் காத்துக்கொள்ளும் வகையில் நான் நடப்பேன், அதற்குத் தரை மார்க் கமே உகந்ததாகும்” என்ருன் ஜேம்ஸ். "அப்படியென்ருல், ஹூவாங்சியூபா கடைப் பிடித்த உபாயத்தையே நீங்களும் பின்பற்றி, கோல நட் மலையின் வழியாகத் தப்பிவிட உத்தேசமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/79&oldid=1274844" இலிருந்து மீள்விக்கப்பட்டது