உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


"ஆமாம், அப்படியேதான்! நாங்கள் இரவில் தான் பிரயாணம் செய்வோம்; பகல் நேரத்தில் மலை களிலே மறைந்துகொள்வோம். நான் தரையில் இருக்கும்பரியந்தம், என்னை நான் சமாளித்துக் கொள்வேன். உங்களுடைய ஆட்கள் எல்லாப் பாதைகளையும் அங்குள்ள தங்கும் இடங்களையும் அறிவார்கள் என்றே கருதுகிறேன்.” "ஒரு வகையில் இது சரிதான். பகல் பொழுது பூராவும் உங்களை யாரும் கண்டுகொள்ள முடியாது. அதைக்காட்டிலும் என்ன செய்ய முடியும்? பிங் ஷானிலிருந்தோ அல்லது லுங்காங்கிலிருந்தோ எங்களுடைய ஆட்கள் உங்களைக் கவனித்துக் கொள் வார்கள். அங்கே நீங்களும் உங்கள் காதலியும் எப்படிப் போய்ச் சேருவீர்கள் என்பதுதான் பிரச்னை!” என்று கூறினன் ஃபான். 'இங்கிருந்து லுங்காங்குக்கு இருபது மைலுக் குக் கூடுதலாக இருக்காது, அங்கும் பாதை இருக்கத் தான் வேண்டும்." - "ஆம், அங்கிருந்து டாம்ஷாயிக்கும் பிங்க்ஷா னுக்கும் நெடுஞ்சாலை போகிறது. பிங்க்ஷானிலிருந்து என் ஆள் அழைத்துச் சென்று போய்விடுவான்." 'பிங்ஷானுக்குப் பிரயாணம் செய்ய அனு மதிச் சீட்டு அவசியம்தான?” "உங்களை மெய்ப்பித்துக் கொள்வதற்குரிய அத் தாட்சிகள் உங்கள் வசம் இருந்தால், அனுமதிச் சீட்டு அவசியமில்லை' அவற்றிற்கு நான் ஏற்பாடு செய்ய முடியும். மேலும் அந்தக் கெடுபிடி இந்த இரண்டாண்டுகளாகச் சற்றுத் தளர்ந்துள்ளது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/80&oldid=1274845" இலிருந்து மீள்விக்கப்பட்டது