உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8i 'ஏன் அப்படி?” "நகரங்களிலிருந்து கிராமங்களுக்கும், கிராமங் களிலிருந்து நகரங்களுக்கும் ஜனங்கள் பலமுறை குடிபெயர்ந்து விட்டனர். அதிர்ச்சிப் படையணிகள் இங்கும் அங்குமாக இயங்கின. யார் யார் எந்த எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று காவல் படை யினருக்கே தட்டுப்படவில்லை. ஷாங்காயைச் சேர்ந்த ஒரு மனிதனுக்கு பிங்ஷான் குடியிருப்புச் சீட்டை உதவினேன். அவர்களும் அம்மனிதனைப் போக அனுமதித்துவிட்டனர். இன்னும் பலருக்கும் இவ் விஷயத்தில் வெற்றிபெற ஒத்தாசை செய்திருக் கிறேன், ஆனால் உங்கள் நிலை பிரத்தியேகமான சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.” ஒரு நிமிஷம் ஃபான் மெளனம் சாதித்தான். அடிப்பகுதி வரையிலும் சிகரெட் எரிந்துவிட்டது. பிறகு அவன் புன்சிரிப்புடன் கூறினன்: "நீங்கள் இச்சோதனையில் தேர்ந்துவிடுவீர்களென்னும் எண் ணம் எனக்கு நிரம்பவும் ஆனந்தம் தரும். நீங்கள் கொரியாவில் இருந்தீர்களல்லவா?" ஜேம்ஸ் ஆம் என்று தலையை ஆட்டினன். "அப்படியென்ருல் நீங்கள் துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவராக இருக்க வேண்டுமே!’ 'வாஸ்தவம்தான். ஆனால், சண்டை எதிலும் நான் பங்கு பெறவில்லை. ஐக்கிய நாடுகளின் சக்தி களுடன் எனக்கு மிகுந்த தொடர்பு இருந்தது; என்னை நான் காத்துக்கொள்ளக் கற்றுக்கொண் டேன்!” என்று சொன்னன் ஜேம்ஸ். 'உங்களால் முடியும்; நான் நம்புகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/81&oldid=753161" இலிருந்து மீள்விக்கப்பட்டது