பக்கம்:இலட்சிய பூமி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


தன் துப்பாக்கியைப்பற்றி அவனிடம் ஜேம்ஸ் பிரஸ்தாபித்தான்; ஃபான் கூர்மையாகக் கேட்டான். "ஆட்சியினர் அதை எடுத்துக்கொண்டார்கள். நான் புறப்படும் தருணம், அதை என்னிடம் திருப் பித் தந்துவிடுவார்கள்!” "அப்படியானல் போய் அதை வாங்குங்கள்.” "முன்பின் ஆலோசிக்காமல் முட்டாள்தனமாக ஆபத்துக்களில் அகப்பட்டுக் கொள்ளும் அசட்டுத் தைரியம் எனக்கு இல்லை!” "துப்பாக்கி எங்கே இருக்கிறது?” "கட்சி அலுவலகத்தில்.” . “உங்களுக்கு அது தேவைப்படும். நீங்கள் துப் பாக்கி சுட நன்கு பழகியவர்:அல்லவா?” இக்கேள்வியை ஃபான் கேட்பது இது இரண் டாம் தடவை. அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக் கிறேன்" ஜேம்ஸ் பதில் சொன்னன். "மேலை நாட்டுத் திரைப்படங்களில் அம்மாதிரிச் சண்டைகளை நான் கண்டு களிப்பதுண்டு. கட்சி அலுவலகத்துக்குச் சென்று. அவர்களுடன் சொகு சாகப் பேசி, உங்களுடைய துப்பாக்கியை ஏன் கேட் கக்கூடாது?....” 'நான் கேட்கிறேன் என்பதற்காக அவர்கள் அதைக் கொடுத்து விடுவார்களென்று எனக்குத் தோன்றவில்லை." "அப்படியல்ல. அவர்கள் நிச்சயம் கொடுப்பார் கள்........ அல்லது உங்களுக்காக நான் அதை வாங்கிக் கொடுத்துவிடட்டுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/82&oldid=1274846" இலிருந்து மீள்விக்கப்பட்டது