உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


ஜேம்ஸ் அவனை ஆச்சரியத்துடன் உற்று நோக் கிஸ்ை. ஃபானின் முகம் அவனது மனவெழுச்சியை வெளிப்படுத்தவில்லை. இறுதியாக அவன் மொழிந் தான்; “அதைப்பற்றி நான் கவனித்துக் கொள்ளு கிறேன்!” ஜேம்ஸ் திகைப்படைந்தான், "இங்கிருந்து நான் எப்போது புறப்பட முடியும்?" “லுங்காங்கில் அல்லது பிங்ஷானில் இருக்கும் எங்கள் ஆலோசகரை கலந்துதான் நான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும். உங்கள் அத்தாட்சிப் பத்திரங்களை தயாராக வைத்திருங்கள். இரண்டு தினங்கள் எப்படியும் வேண்டும். கதவுச்சாவி க்ளிக் என்று ஒசைப்படுத்தியது; கதவு திறந்தது. அவர்களிரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே ஈஸ் உள்ளே அடி யெடுத்து வைத்தாள். அவள் விழிகளில் ஒரு மலர்ச்சி மின்னியது. தாழ்.குரலில், 'நலந்தானே? வேறு ஒன்றும் விசேஷமில்லையே?’ என்று கேட் டாள். தலையிலிருந்த குல்லாயை அப்புறப்படுத்தி ள்ை; தலை மயிரைத் தட்டி விட்டுக்கொண்டாள்; ஜேம்ஸை ஒரக்கண்ணுல் அவசரமாகப் பார்த்தபடி “என் கடமை முடிந்துவிட்டது இப்போது” என்று அறிவித்தாள். - முதல் தடவையாக-இப்போதுதான் ஈஸ்ாவை வயதடைந்த ஒரு பெண்ணுகக் கண்டான் ஜேம்ஸ். வயசான இளம் பெண்ணின் பண்பட்ட கவர்ச்சி மாறியது; அதற்குப் பதிலாக பதினெட்டு வயதுள்ள பெண்ணின் பரிசுத்தப் பொலிவு ஒளிர்ந்தது. யுத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/83&oldid=1274847" இலிருந்து மீள்விக்கப்பட்டது