உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


நடந்த வருஷங்களிலும் அவர்கள் பிரிந்திருந்த காலத் திலும் அவள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள் என்பதைப்பற்றிக் கதை சொல்லுவதுபோல அவளு டைய கண்கள் தோன்றின. அவன் இதுவரை கண் டிராத ஒரு நூதனமான ஆழத்தை தயக்கம் நிரம் பிய அமைதியான அந்தப் பார்வை புலப்படுத்திற்று. இயல்பாகவே அழகியான அவள் இப்போது நல்ல எழிலுடன் திகழ்ந்தாள். அவளது கண்களில் ஈரக் கசிவு இருந்தது. இது அவன் மனத்தை உருக்கியது. காத்துக்கிடந்த வருஷங்களின் துயரங்கள் உருவாக் கிய நேசம், அல்லல், கோபம் போன்ற உணர்ச்சிகளை அக் கரிய கண்கள் காட்டின. அவள் கன்னங்கள் முழுமை பெற்றிருந்தன. எப்போதும் மெல்லியதாக இராத அவள் உதடுகள் மென்மையுடன் வளைவு பெற்றிருந்தன! வெண்ணிறத் தொண்டையின் பக்கமிருந்த வட்டமான அவளது முகவாய்க்கட்டை ஓர் அழகிய வளைவை உண்டாக்கியது. ஒருவகை நடனத்தைச் சித்திரித்த வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய பருத்தியாலான நீலவண்ண கவுன் அணிந் திருந்தாள். ஃபானின் பேச்சை அவள் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், தீவீரமான உணர்ச் சிப் பெருக்குடன் அவள் ஜேம்ஸை உற்றுப்பார்த் தாள். 'திட்டங்களைப்பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். அவரும் உங்களுடன் மலைக்குப் பக்கமாக வருவதாக விடாப்பிடியாகச் சொல்கிருர், நாம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருந்தாக வேண் டும், அவர் அதி சீக்கிரமாக பிறர் கவனத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/84&oldid=1274848" இலிருந்து மீள்விக்கப்பட்டது