உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


கவரும் வகையில் இருக்கிருர்-இது உங்களுக்குத் தெரிந்ததே. எவ்விதத்திலும் நாங்கள் காரியத்தைச் சாதித்துவிடுவோம். உங்கள் காதலர் இஷ்டப்பிர காரமே முயற்சி செய்து பார்க்க வேண்டுமென்று தானே நீங்களும் திடமுடன் ஆசைப்படுகிறீர்கள்?’ ஈஸ் கடைக்கண்ணுல் பார்த்தாள். "ஆமாம் என் பக்கத்தில் அவர் இருந்தால், நான் பயப்பட மாட்டேன்!” என்ருள். 'அதில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய சாந்தர்ப் பங்களே அதிகமாக இருக்கின்றன!” “எப்படியும் நாங்கள் இருவரும் போகத்தான் போகிருேம். இந்த ஒரு சந்தர்ப்பத்துக்காகவே நான் வருஷக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறேன்' என்ருள், அவள் இதைச் சொன்னபோது அவளது புன்னகையில் தன்னம்பிக்கை மிகுந்து நின்றது. 'அப்புறம் ஏன் கவலைப்பட வேண்டும்? நாம் அவ்வப்போது சந்தித்துத் தொடர்பு கொள்ளுவ தற்கு நான் உதவுவேன். ஈஸ்"வையும் நான் பொறுப் புடன் பார்த்துக் கொள்ளுவேன்.” என்ருன் ஜேம்ஸ். - 'பிறகு நான் உங்களுக்குச் சொல்லியனுப்பு கிறேன். என்னுடைய நேரத்துக்குத் தோதாக உங்கள் அத்தை புறப்படுவதற்குத் தயாராக இருக் கும்படிச் செய்யுங்கள்” என்ருன் ஃபான். இப்போது ஈஸுவைப் பார்த்துப் பேசலானன்: “பிரயாணம் நாலைந்து நாட்களுக்குத் தொடரும், ஆகவே, நீங்கள் அதற்குத் தக்கபடி தயாராக இருக்க வேண்டும். நீங்கள் பிங்ஷானைச் சேர்ந்த பிரஜை 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/85&oldid=1274849" இலிருந்து மீள்விக்கப்பட்டது