உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


அதுமாதிரியான பேச்சுக்கள் ஏதோ காதுகளில் விழுந்தது. இப்போதுதான் அதைப்பற்றி யோசிக் கிறேன். என்னைப்பற்றி ரொம்பவும் அற்பமாகப் பேசியிருக்கிருன். சீனப் பெண்கள்தான் கச்சைகள் அணிந்துகொள்வது வழக்கம். மேலங்கிக்குக் கீழே மையத்தில் அணிந்துகொள்ளக்கூடிய முக்கோண வடிவமான ஒரு துணி அது!....அதில், நாணயங்கள், கைக்குட்டை முதலியவை வைத்திருக்க ஒரு பையும் இருக்கும்!...” "நான் அதை அறியேன்!” 'அந்த முறையில் வறுத்த அரிசியை எப்பொழு தும் கதகதப்புடன் வைத்துக்கொண்டிருக்க முடியு மென்று எனக்கு நன்ருகத் தெரியும். அதற்கு உடலின் உஷ்ண நிலைதான் காரணம்.” "என்னல் உணர முடிகிறது-நீ உனது மகிழ்ச் சியை இழந்துவிடாமல் இருக்கிருய்.” 'நீங்களும்தான் உங்கள் மகிழ்ச்சியை இழந்து விடாமல் இருக்கிறீர்கள். என்ன சிறை எடுத்துச் செல்லும் உங்களுடைய அந்த அழகான யோசனையே போதுமே.கண்மூடித்தனமாக இருப்பது', 'அறி விழந்த நிலையில் இருப்பது ஆகிய இவ்விரண்டு நிலை களுக்கும் உள்ள வேறுபாடு பற்றி நாம் பேசி: முடிவில் அறிவிழந்த நிலையில் இருப்பது என்னும் வார்த்தையே சிறப்பானதென்று நாம் இருவரும் ஒப்புக்கொண்டோம். அதை நினைவுபடுத்திப் பார். அது ஏறக்குறைய சிறுபிள்ளைத் தனமாகவோ, அல்லது முட்டாள் தனமாகவோதான் இருக்கின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/90&oldid=1274853" இலிருந்து மீள்விக்கப்பட்டது