பக்கம்:இல்லற நெறி.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562

இல்லற நெறி


ஆலோசனையையும் நம்மிடம் வளர்க்கும். தம் நிலையில் வைத்துப் பிறரைப் புரிந்துகொண்டால் அனைத்தும் சீர்படும்; செவ்வையாக அமையும்.

இரண்டாவது: துணைவியைப் போற்றிப் பாராட்டுதல் வேண்டும்; அன்புடன் நடத்த வேண்டும். அடிமைபோல் நடத்தலாகாது; ஆக்கிரமிப்பும் கூடாது. திருமணம் என்பது ஒருவரையொருவர் சார்ந்து வாழ்தல் என்ற உடன்படிக்கை யாகும்; உறுதிமொழியுமாகும். உன்னைப் பிரியேன்: தரியேன்” என்று அகப் பொருள் நூல்க ளில் காணப்பெறும் தலைவனின் உறுதிமொழியை ஈண்டு நினைவு கூர்க, வாழ் விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும், நலத் தினும் நோயினும் போற்றிப் பாதுகாப்பதுதானே திருமண உறுதிமொழி? இந்த மனப்பான்மையிருந்தால்தானே தம்பதி களின் அன்பும் செழித்து வளர்ந்தோங்கும்; கணவனின் உண்மையன்பும் மகிழ்ச்சியும் மனைவியிடம் அன்பினை வளர்த்து இன்ப உணர்ச்சி பொங்கச் செய்யும். சிலப்பதி காரக் கோவலன்,

மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெற்ற பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வணிகன் பெரும - மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ அலேயிடைப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை: என்று உலவாக் கட்டுரை பல பாராட்டுவதை இளங்கோ அடிகளும், சீவகன் தன் மனைவியரிடம் நலம் பாராட்டுவதைத் திருத்தக்க தேவரும் காட்டுவதைப்போன்ற முறைகளில் சமயம் வரும்பொழுதெல்லாம் துணைவியரைப் புகழ்ந்து கூறுதல் பெருநலம் பயக்கும்:

லெப்-மன் ( )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/568&oldid=1285353" இலிருந்து மீள்விக்கப்பட்டது