பக்கம்:இல்லற நெறி.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564

இல்லற நெறி


வேண்யடி உரிமைகளையும் இன்னவென தெளிவாகப் புரிந்து கொண்டு இரண்டையும்நிறைவேற்றுகல் வேண்டும். வீணுக இரண்டையும் குழப்பிக்கொண்டு வகையறியாது விழிப்பது அறிவுடைமையன்று என்பதை நன்கு உணர்வாயக.

நான்காவது : உடலுறவு மூலம் அன்பு செலுத்தும் கலையைக் கணவன் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். நன் முறையில் பால் பொருத்தம் அமைந்தால் திருமண உறவும் பலமாக அமையும். காதல் விளையாட்டுகளையும், பாலுறவு இருவருக்கும் ஒரே காலத்தில் திருப்தி யளிக்கக்கூடியவாறு கலவி புரியும் முறைகளையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இருவரும் இணைந்து பிணைந்து வாழுங்கால் பற்றி னையும் சிற்றின்ப உணர்வினையும் நன்குவளர்த்துக் கொள்ள வேண்டும். பாலுறவுகள் மிகத் திருப்தியாக நடைபெறு வதற்கேற்றவாறு திருமண வெற்றியும் அதிகமாகும் என் பதை அறிவாயாக. இறையனர் களவியல் ஆசிரியர் காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்' என்று கூறியிருத்தல்ையும் அதற்கு நக்கீரர் கூறும் உரை நயத்தையும் அறிந்தால் இதன் இன்றியமையாமை உனக்குத் தெளிவாகும். வள்ளுவரின் இன்பத்துப் பாலில் கூறியுள்ள பல நிகழ்ச்சிகளும் இளம் தம்பதிகட்குத் துணையாக இருக்கும். தம்பதிகளிடம் எப் பொழுதும் இன்பச் சூழ்நிலை நிலவுவது மிகவும் இன்றியமை யாதது என்பதை மிகவும் வற்புறுத்துவேன்.

ஐந்தாவது : தாய் தந்தையர்-பெற்ருேர்-என்ற நிலைக்கு மணமக்கள் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். குழந்தைப் பேறுபற்றியும் குழந்தை வளர்ப்பு பற்றியும் அடிப்படைக் கருத்துகளை விளக்கும் நூல்களைப் படித்து அச்செய்திகளை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். பெற்றேர்கள் குழந்தைகளை இளமை யில் வளர்க்கும் முறைகளைப் பொறுத்தே அவர்களின் உடல், உள்ள-நலன்கள் அமைகின்றன என்பதை மணமக்கள்

38. இறையனர் களவியல்-நூற் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/570&oldid=1285354" இலிருந்து மீள்விக்கப்பட்டது