பக்கம்:இல்லற நெறி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இல்லற நெறி


மரபுவழியாக வந்தனவாகத்தானே கருதவேண்டும் என்று நீ நினைக்கலாம். அப்படித்தான் அமையவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு குழந்தை தாயின் கருப்பையில்? வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலோ, அல்லது அது பிறக் கும் நிலையிலோ சில குறைகளை அல்லது நோய்களைப் பெற லாம்; இத்தகைய குறைகள் மரபுவழியாக வந்தவையன்று: பிறவியைச் சார்ந்த நிலையையும்-அஃதாவது பிறப்பின் பொழுது இருப்பது- மரபுவழியாக வந்தநிலையையும் நீபிரிந் தறிந்து கொள்ளத் தெரிந்துகொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் அறிவியலறிஞர்கள் இதுபற்றிய சிலசோதனைகளை மேற்கொண்டு சரியான முடிவுகட்கு வந்துள்ளனர். ஒரு தாய் கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் ஜெர்மன் தட்டம்மை" நோயால் பீடிக்கப்பெற்று அதன் காரணமாக அந்நோயின் 'வைரஸ்' எனப்படும் நுண்ணிய கிருமி கள் தாயிடமிருந்து அவள் வயிற்றில் வளரும் குழவியிடம் பாய்ந்து அக்குழந்தை யின் வளர்ச்சியில் கடுமையான இயல்பி சுந்த பண்புகளை உண் டாக் ,கின்றன. அதன் பிறகு குழந்தை பிறக்குங்கால் உட லில் பல்வேறு கோளாறுகளுடன் பிறக்கலாம்; அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் குருடாகவோ செவிடாகவோ இருக்க வும் ஏதுவுண்டு. இத்தகைய நிலை பிறவி சார்ந்தது: அஃதா வது, குழந்தை அக்குறையுடன் பிறந்தது. இது மரபுவழி யைச் சார்ந்தது அன்று; இக்குறை அடுத்த தலைமுறைக்கு இறங்கவும் செய்யாது. இங்ங்ணமே, ஒரு தாய் கருவுற்றிருக் குங்கால் பித்தக்காய்ச்சலால் ' தாக்குண்டு, அவள் வயிற்றி லுள்ள குழந்தை அக்காய்ச்சற் கிருமிகளால் பாதிக்கப் பெ று, அது பிறக்குங்கால் அந்நோய் இருந்தாலும் அதுவும் மரபுவழியாக வந்தது அன்று. எனவே மரபுவழிப் பண்பு என்பது, பெற்றேரின் இனப்பெருக்க உயிரணுக்களில் இருப்

78. 565.jø L1–Womb. 80. Goossro)—Virus: 79. Glgrfupair 51. L-lb colo-German meàsles. 81. 1355& 5rrtirSæsv—Typhoid fever. 82. §glélagir-ferms.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/66&oldid=1285108" இலிருந்து மீள்விக்கப்பட்டது