பக்கம்:இல்லற நெறி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 台瑟

பது; அதுதான் குழந்தையின் உடலமைப்பின் ஒரு பகுதி யாகக் கடத்தப்பெறுகின்றது.

இவ்விடத்தில் இயல்பாகவே ஒர் ஐயம் உன் மனத்தில் எழலாம். ஒரு குழந்தையின் உடற்கூறினுள் காணப்பெறும் இயல்பிகந்த குறை மரபுவழியாக வந்ததா, அன்ரு என்ப தைக் கூறுவது சாத்தியமா என்று நீ வினவலாம். இஃது ஒரு குறிப்பிட்ட குறையினைப் பொறுத்தது. இங்கும் நீ மரபுவழியாக வந்த நோயினையும்?? இடையில் நேர்ந்தக் நோயினையும் வேறு பிரித்து அறிந்துகொள்ளவேண்டும். இடையில் நேர்ந்தநோய்கள் குடும்பத்தைப் பற்றியவை யன்று. எடுத்துக் காட்டாக ஒருவர் சிறுவயதில் தனக்கு நேரிட்ட இளம்பிள்ளை வாதத்தின் காரணமாக ஒரு குறையை அடைதல்கூடும்; இவ்வகைக் குறை மரபுவழியாக வருவதன்று; இக்குறை அவரது சந்ததியினருக்குக் கடத்தப் பெறுவதுமன்று. அங்ங்ணமே, ஒருவருக்குக் காதில் ஏற்பட்ட திங்கினல் அல்லது நோயினுல் செவிட்டுத்தன்மை உண்டாக லாம்; இத்தகைய செவிட்டுத்தன்மையும் மரபுவழியாக இறங்குவதன்று. எனினும், ஒரு சில இயல்பிகந்த உடற்கூறு கள் திட்டமாக மரபுவழியாக இறங்குகின்றன. பிளந்தஉதடு, கைகால்களில் ஆறுவிரல்கள் இருத்தல் இவை போன்ற சில பிறவிக் கோளாறுகள் குழந்தையிடம் தலைமுறைத் தலைமுறையாகத் தோன்றுகின்றன. அங்ங்ணமே, கண்ணினை யும் காதினேயும் பற்றிய சிலவகைக் கோளாறுகள், காயம் பட்டால் நிற்காமல் குருதி வடிதல், வழிவழியாகக் குடும்பத் தில் காணப்பெறும் வேறு குறைகள்- இவை யாவும் குறை பாடுள்ள ஜீன்களால் ஏற்படுபவை. மேலும், ஒருவருடைய உடல் தளர்ச்சியும் மரபுவழியாகக் கடத்தப்பெற்று அதன் காரணமாக ஒரு தனியாள் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இரை:ாகவும் நேரிடலாம். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வகைக் குறைகளுக்கான முன் முடிவு படுத்தும் நிலை

83. Garri,--Ailment. 84. இடையில் நேர்ந்த-Acquired: - 85. gamibiosität ourgth—Infantile paralysis:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/67&oldid=598882" இலிருந்து மீள்விக்கப்பட்டது