பக்கம்:ஈச்சம்பாய்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

ஈச்சம்பாய்


கூடவே குறும்புச் சிரிப்பு. அவனை நாணத்தோடு, ஏறிட்டு நோக்கி, நளினத்தோடு நடை போட்டாள். கடந்த காலத்திலேயே வாழ்ந்தவள், அதைக் கடப்பதுபோல், கிழக்குப் பாறை மேட்டில் இருந்து, இன்னொரு பாறை மேட்டிற்குத் தாவி நடந்தாள். ரோஜாப்பூக்களைத் தடவி விட்டபடி, வாழைக் குலைகளை வருடியபடி, ஆலம் விழுதுகளை ஆட்டியபடியே நடந்து மேளா சுற்றத்திற்கு வந்தவள், தன் வீட்டிற்குள் சுகபோக நினைவுப் போதையுடன் திரும்பப் போனபோது -

“ஏய், பெல்லிபாய். இங்கே வா.”

மேளா எஜமானரு பாபன் நாய்க்கரும், இன்னும் நாலைந்து கிழடு கட்டைகளும் பாறை மேட்டில் உட்கார்ந்திருக்க, மலைக்கூட்டம் பொதுக் கூட்டம்போல் கீழே வியாபித்திருந்தது. பெல்லிபாய், சத்தம் கேட்டுத் தடுமாறியபோது, இரண்டு பெண்கள், அவளை வலுக்கட்டாயமாக இழுத்து, மேளாத் தலைவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். திடீரென்று ‘அம்மா’ என்ற அலறல் சத்தம் - பிள்ளைச் சத்தம். பெல்லி ஆவலோடு திரும்பியபோது, அவள் மகன், மச்சான் பெண்டாட்டியின் கைச் சிறைக்குள் துடித்துக் கொண்டிருந்தான்.

மேளா எஜமானரு பாபன் நாய்க்கன், அதட்டலோடு பேசினார்.

“பெல்லிபாய், நீ எதுக்காகப் புடவை கட்டுனே, எதுக்காக அங்கே போயிட்டு இங்கே வரேன்னு எல்லோருக்கும் தெரியும். நீ அந்தக் கல்வெட்டுக்காரனோட பேசற பேச்சும், குழையுற குழையலும் நல்லாவே தெரியும். காலம் மாறிட்டதால், உன்னையோ, அவனையோ நாங்க முயல வெட்டறது மாதிரி வெட்டல. போகனுமுன்னால் போ. மத்த மேளாக்காரங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/118&oldid=1371671" இலிருந்து மீள்விக்கப்பட்டது