பக்கம்:ஈச்சம்பாய்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

117


முன்னால நம்மோட கறால்மேளா அவமானப்படும் என்றாலும், உன்னை நாங்க போகவிடாமல் தடுக்கப் போறதாய் இல்லே. ஆனால் போயிட்டால், திரும்பி வரப்படாது. உன்னை மாதிரியே ஒருத்தனோட ஓடிப் போயிட்டு அப்புறம் இங்கே திரும்ப வந்து பிள்ளையைப் பார்க்கறதுக்குத் துடிச்சாளே, லட்சுமிபாய்... அவளை மாதிரிதான் நீ ஆகவேண்டியது வரும். அப்போ இந்த லட்சுமிபாய்க்குப் பிடிச்ச பைத்தியம், ஒனக்கும் பிடிச்சால், நாங்க பொறுப்பில்லே. போகணுமுன்னால் போயிடு. ஆனால் குழந்தை உன்னது இல்லே. இது சுறால் மேனாவோட பிள்ளை. இந்த மேளாவோட பெருமையை வருங்காலத்துலேயும் நிலைநாட்டப் போகிற ஆம்பிளை, நீ பொம்பிளை. போகணுமுன்னால் போ.”

பெல்லிபாயின் காதில் எங்கிருந்தோ அவள் குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். குரல் கேட்கிறது. குரலுக்குரிய பிள்ளையைக் காணவில்லை, தாய்மையில் தவித்தாள். பலாமரக் கிளைகள் வழியாய்ப் பள்ளிக் கட்டிடத்தைப் பார்த்துக் காதலியாய் துடித்தாள். கட்டிடம் முழுவதையும் கண்களால் வட்டமடித்து, தனிமை உணர்வில் அல்லாடினாள். குழந்தையின் அழுகை அடங்கி, ஏதோ ஓர் ஈன முனகல் இறங்குமுகமாய்க் கேட்டது.

மேளாத் தலைவன் அதட்டினான்.

“உம். போகணுமுன்னால் இப்பவே போ! எக்கேடு கெட்டுப் போ. இங்கே இருந்து எங்க மானத்தை வாங்குறதைவிட, ஒரேயடியாய்ப் போயிடு.”

பெல்லிபாய், சிறிது நேரம், தலையைப் பெருவிரலால் கீறினாள். முகத்தை முந்தானையால் மூடினாள். சிக்கையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/119&oldid=1371680" இலிருந்து மீள்விக்கப்பட்டது