பக்கம்:ஈச்சம்பாய்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

155



வந்தவர் இவர். அப்போது ஆலமரமாகி இப்போது கிளையற்றுப்போன சென்னைப் பல்கலைக் கழகம், மாநிலம் தழுவி நடத்திய அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில், இவர்தான் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். பத்திரிகைகளிலும், இந்த அமைச்சரின் கவிதைகளை விட, இவரது கவிதைகளுக்கே மௌக இருந்த காலம். இந்த இருவரின் ஒத்துழைப்பால் இவரே கல்லூரியில் தமிழ் மாணவர் மன்றத் தலைவராக் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு தலைமைப் பண்பு கொண்டிருந்தார். ஏதோ ஒரு பட்டிமண்டபத்தில், இவரது சொற்பொழிவைக் கேட்ட உள்ளூர் அரசியல் வாதி பெரியசாமிக்கு, இவரைப் பிடித்துப் போய்விட்டது. கூடவே சொந்த சாதி அபிமானம். இவரை கட்சி மேடைகளில் பேசச் சொன்னார். தனக்கு உள்ள செல்வாக்கை இவரிடம் தெரியப்படுத்தினார். பேச்சாளர்களே தலைவர்களாகும். காலம் என்பதால், இவரும் ஒரு எதிர்கால அமைச்சர் ஆகலாம் என்று ஆசை காட்டினார். அதில் ஒரு ஆத்ம நேயமும் வெளிப்பட்டது, இவருக்கும் சிறிது ஆசைதான், ஆனாலும் யோசித்துப் பார்த்து மறுத்துவிட்டார். அரசியல் மேடைப் பேச்சில், ஆபாசத்தைக் கலக்க வேண்டும். பழி போட்டு பேசவேண்டும். 'தோல் இருக்க களை விழுங்கியே... முழுப்பாய் சுருட்டியே! கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் கேட்பவனே!' என்று காட்டமாக எதிர்க்கட்சித் தலைவர்களை வர்ணிக்க வேண்டும். எதிர்க்கட்சிப் பெண் பிரமுகர் என்றால், அவரை 'உன் பிடரிப்பூ கசங்கி இருக்கிறதே ஏன்?-- உன் உள்ளாடை நனைந்திருக்கிறதே ஏன்?' என்று பேசியாக வேண்டும். தலைவர்களைப் பார்க்கும்போதெல்லாம், நாம் காரிலோ, சைக்கிளிலோ போகும்போது, 'என்னையும் கூட்டிப்போ' என்பதுமாதிரி, தமது வீட்டு நாய் பார்க்குமே அப்படிப் பார்க்க வேண்டும்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/157&oldid=1371876" இலிருந்து மீள்விக்கப்பட்டது