பக்கம்:ஈச்சம்பாய்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

ஈச்சம்பாய்



பழனிச்சாமி, அரசியலில் குதிக்க மறுத்துவிட்டதால், பெரியசாமி சளைக்கவில்லை. இதோ தொலைக்காட்சியில் பேசுகிறாரே மாநில அமைச்சர்.. அந்த மாணவரை தயார் படுத்திவிட்டார். இந்த அமைச்சரும் வாயை ஆபாச ஊற்றாக்கி நாடறிந்த பேச்சாளாராகி விட்டார். இந்த அமைச்சரை அதிகமாகப் பிடிக்காத, அதே சமயம் இந்த பழனிச்சாமியின்மேல் ஒரு கண் வைத்திருந்த, அப்போதைய நல்லவளான இந்தப் பெண் அமைச்சர், இன்னொரு கட்சியில் இணைந்தார். கவிஞராயிற்றே.... கட்சித் தலைவர்களுக்கு பிள்ளைத்தமிழ் பாடி, புத்தககங்கள் வெளியிட்டார். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய ஏழு பருவப் பெண்களாக தன்னை அனுமானித்துக் கொண்டு, தலைவருக்கு உலா பாடினார். தானைத் தலைவரைக் கண்டு, கருத்தழிந்து, காமுற்றதாக காவிய உலாக்களைப் படைத்தார். செயலிலும் இவர் ஒரு வீராங்கனையாக மாறினார். பல்வேறு போராட்டங்களில் - இவரது இடுப்புக்குக் கீழே சேலை இருந்ததே கிடையாது, பாவடையோடு சேர்த்து, மார்புக்குத் திரையாகி விடும். இதனால் கிடைத்த பேரும் புகழும் இவரை முக்கியமான அரசியல் பிரமுகராக்கி, இப்போது அமைச்சராக்கி விட்டது. ஆனால் இவரோ....

பழனிச்சாமிக்கு, அந்த அமைச்சர்களை மேற்கொண்டு பார்க்கப் பிடிக்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் மந்திரக் கோலில் ஒரு எண்ணை அழுத்தி, 'டிஸ்கவரி'யில் தோன்றிய மிருகங்களைப் பார்த்தார். ராட்சத பாகற்காய் போன்ற காடு- அதன் மேனி முழுவதும் வியாபித்த துனிர்கள்போல் மரங்கள்.. புதர்க் குவியல்கள்.... அதன் சிவப்பு விதைகள் போன்ற சதுப்பு நிலக் குட்டைகள் - அதே பாகற்காய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/158&oldid=1371755" இலிருந்து மீள்விக்கப்பட்டது