பக்கம்:ஈச்சம்பாய்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

ஈச்சம்பாய்


சுந்தரம், மீண்டும் டெபுடி கமிஷனரை நினைத்துக் கொண்டு பயத்தால் பயங்கரவாதிபோல் கேட்கிறார்.

‘என் பேர் கந்தரம். பாக்கியமுத்தோட பாஸ் நான்தான் வாய் மொழியாக் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிட்டேனே... நீங்களும் எப்.இ.ஆர் போடல... அப்படியும் என் செர்வன்ட எப்படி சார் லாக்கப்பிலே போடலாம்...’

இன்ஸ்பெக்டர், ஒரு பேப்பர் வெயிட்டை அவர் மேல் எறியப்போவதுபோல் தூக்கினார். எதேச்சையா. டெக்னிக்கா தெரியவில்லை. பிடித்த பிடியை விடாமலேயே, சுந்தரத்தைப் பார்க்காமலேயே, சுந்தரத்திற்குப் பதில் அளித்தார்.

‘லுக் மிஸ்டர்... ஒவ்வொருத்தரும் எங்களுக்கு எழுத்துமூலம் புகார் தரணுமின்னு அவசியமில்ல... நாங்களே கயோ மோட்டோவா, அதான் தன்னிச்சையா நடவடிக்கை எடுக்கலாம். எப்போ ஒரு திருடு நடந்திட்டதா எங்க பார்வைக்கு வந்திடுதோ... அப்ப புகார் முக்கியமில்ல... சட்டந்தான் முக்கியம். எந்த கேசையும் எல்லாக் கோணத்திலயும் பார்க்கிறதுதான் போலிக நீங்க கூட இன்ஸுரன்ஸ் காரனுகள ஏமாத்துறதுக்கு இப்படி செய்திருக்கலாம் இல்லியா....’

‘என்னப்பற்றி டெபுடி கமிஷனர் மிஸ்ட்ர் கொண்டையா கிட்ட கேட்டுப்பாருங்க் சார்..’

‘சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... இவர் உங்ககிட்ட விவரமாச் சொல்வார்... நான் இப்ப அவசரமா வெளியிலே போறேன்... இந்தாப்பா இந்த அப்பாவி மனுஷனுக்கு அந்த ஸ்டேட்மென்ட காட்டு...’

இன்ஸ்பெக்டர் இடுப்பைச்சுற்றிய பெல்டோடு, உறைபோட்ட துப்பாக்கியோடு, லத்திக்கம்பு வீச்சாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/96&oldid=1372018" இலிருந்து மீள்விக்கப்பட்டது