பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஈரோடு மாவட்ட வரலாறு


பட்டாணி துலுக்கர்' என்று அழைக்கின்றனர். கொங்கு வேளாளர் பலர் துலுக்கண கவுண்டர் என்று பெயர் வைத்துக் கொள்வதுடன் 'துலுக்கணசாமி' 'துலுக்கநாச்சியம்மன்' என்ற பெயரில் தெய்வத்தையும் வணங்கி வருகின்றனர். 'துலுக்கபாளையம்" என ஊரும் உள்ளது.

குன்னத்தூர் அருகேயுள்ள குறிச்சி செல்லாண்டியம்மன் கோயிலுக்குத் திப்பு சுல்தான் கொடை கொடுத்துள்ளார். ஈரோடு காவேரிக் கரையில் உள்ள 'ஹஜ்ரத் சேக் அலாவுதீன் பாதுஷா தர்கா'விற்கு 12.12.1761 அன்று பக்கிரிகளுக்கு அன்னம் அளிக்கவும் ஆடை வழங்கவும் ஈரோடு கோட்டையில் பணியாற்றிய கிருஷ்ணராச உடையாரின் அதிகாரி ரங்கையநாத திம்மரசையனும் சுந்தாசாரம், அட்டவணை, சேனபாகம், சேருவைகாரர் முதலிய பணியாளர்களும் "(காலிங்கராயன்) அணை ஒபளிக்குச் சேர்ந்த வயிராபாளையம் வதிகரையில் மறுகால் கரையில் பீளமேட்டில் தோப்படியில் நான்கு மா நன்செய் நிலம்" கொடையளித்துள்ளனர், இதைக் குறிக்கும் கல்வெட்டு தர்காவில் உள்ளது.

காங்கயம் அய்யாவு சாவுத்தர் வீராட்சிமங்கலம் கந்தசாமிக் கவிராயரின் வேளாள புராணத்திற்கு 'சாற்றுக்கவி" அளித்துள்ளார். ஜம்பை காசிம்புலவர் அரங்கநாதக்கவிராயர் இயற்றிய அருச்சுணன் தீர்த்தயாத் திரை நூலுக்குச் சாற்றுக்கவி கொடுத்துள்ளார். அவர் "அரிச்சந்திர நாடகக் கீர்த்தனை" என்ற நூலையும் "திருநீலகண்டர் நாடகக் கீர்த்தனை"யையும் இயற்றியுள்ளார்.

ஈரோடு பெரியார் வீதியில் உள்ள ஜாமி ஆ மசூதி பெரிய பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மினார் (கோபுரம்}, ஜன்னல், விளக்கு, சுவர் எல்லாம் அழகிய வேலைப்பாடு மிக்கவை. இங்கு காலையிலும், மாலையிலும் சிறுபிள்ளைகட்குக் 'குர்ஆன்' கற்றுக் கொடுக்கப்படுகிறது.

பிராமணப் பெரிய அக்கிரகாரத்தில் ஹஜ்ரத் மீரா உசேன் அவுலியாதர்கா உள்ளது. ஆண்டுதோறும் கந்தூரி சிறப்பாக நடைபெறுகிறது.காங்கயம் தப்லீக் மசூதிக்கு மதுரை சுல்தான் வருகை தந்து நிலக்