பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

119


கொடையளித்துள்ளார். ஊத்துக்குளி வடுகபாளையம் தர்காவிற்கும் துடுப்பதி இப்ராகீம் பாதுஷா தர்காவிற்கும் திப்புசுல்தான் வருகை புரிந்து கொடையளித்துள்ளார். நம்பியூரில் அசன் அலி தர்கா உள்ளது.

ஈரோடு பழைய இரயில்வே நிலையம் பள்ளி வாசல் சுல்தான் பேட்டை மஹல்லா பள்ளிவாசல், இரயில்வே காலனி பள்ளிவாசல் பழமையானவை. நேதாஜி சாலை (முதலாளி பங்களா), பெரியார் நகர், திருநகர், அசோகபுரம், அண்ணா நகர், கண்டிராதவளத்தான் குளம், லக்காபுரம், சங்கு நகர், திண்டல் ஆகிய இடங்களில் புதிய பள்ளிவாசல்கள் ஏற்படுத்தப்பட்டுத் தொழுகை நடந்து வருகிறது.

தாளவாடியில் திப்பு சுல்தான் கட்டிய மசூதி உள்ளது. வெள்ள கோயில், தாளவாடி, கவுந்தப்பாடி, காங்கயம்பாளையம், குருமந்தூர் ஆகிய இடங்களில் பள்ளிவாசல்களும், கொடுமுடி, கள்ளக்கவுண்டன் புதூர், வள்ளியம் பாளையம், காசிபாளையம், சென்னிமலை, பெருந்துறை, பவானி, ஜம்பை, ஒலகடம், அந்தியூர், கோபி, பெருந் தலையூர் ஆகிய இடங்களில் தர்காக்களும் உள்ளன.

மேவானியில் உள்ள தர்காவிலும் கபர்ஸ்தானிலும் இந்துக்களும் வழிபடுகின்றனர். ஈரோடு காவிரிக்கரை தர்கா, பெரியபள்ளி வாசலுக்கும் இந்துக்கள் வருகின்றனர். ஈரோடு ஜன்னாத்துல் பாக்கி “ யாத் மதரசாவில் குழந்தைகள் சமயக்கல்வி கற்கின்றனர். ஈ.கே.எம். முகமது அப்துல் கனி மதரசா இசுலாமிய மேல்நிலைப்பள்ளி 1935ஆம் ஆண்டு சிறு பள்ளியாகத் தொடங்கப்பட்டது.

பழைய கோட்டைப் பட்டக்காரர் திப்பு சுல்தானுக்குக் குதிரைகள் அளித்துள்ளார். ஒரு பட்டக்காரர் முடிசூட்டு விழா "போர் வீரராம் ஐதர் அலிகான் சாயபின் புலி போன்ற தாசில்தார்" கலந்து கொள்ள நடை பெற்றுள்ளது.

பட்டக்காரர் மூடிகுட்டு விழாவில் குடைபிடிக்கும் உரிமை சுமால் சாயபு என்பவருக்கு அளிக்கப்பட்டது. இன்றும் பழைய கோட்டை