பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

29. தொழில்கள்



பண்டைய தொழில்

ஈரோடு மாவட்டப் பகுதியில் பண்டைக்காலம் முதல் நடந்து வந்த உழவுத்தொழில் மூலம் விளைந்த பருத்தியைக் கொண்டு நூல் தயாரித்து ஆடை நெய்துள்ளனர். பஞ்ச கம்மாளர் என்னும் ஐவகை ஆசாரிமார்கள் பொன்வேலை, உலோக வேலை, கல் வேலை. மர வேலை, சிற்ப வேலை ஆகியவற்றைச் செய்தனர். இவற்றைத் தவிர வேறு தொழில்கள் அதிகமாகத் தோன்றவில்லை. அதற்கான தேவையும் அக்காலத்தில் இல்லை. உற்பத்தியான பொருட்களை கொண்டு செல்லவும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரவும் வணிகர்கள் இருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் கிடைக்கும் பல்வேறு கற்களைக் கொண்டு வண்ணக் கல் மணிகளைச் செய்தனர். இரும்பு எடுத்து உருக்காக மாற்றினர். அவற்றை வெளிநாடுகளுக்கும் அனுப்பினர். கிராமத்தில் வைவினைஞர்கள் இருந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனிகள்

கிழக்கிந்தியக் கம்பெனியினர் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்குத் தகுந்த சந்தை தேடும் போது அவர்களுக்கு அதிக மக்கள்தொகையும் வாங்கும் சக்தியும் உடைய இந்தியா தென்பட்டது. இங்கு தங்கள் தொழிலைத் தொடங்கினர். டச்சுக்காரச், போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர் அம்முயற்சியை மேற்கொண்டனர். அத்தொழில் போட்டியில் ஆங்கிலேயர் இறுதியில் வென்றனர். இங்குள்ள நிலையைப் பயன்படுத்தி நாடாளும் உரிமையும் பெற்றனர்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் தங்கள் நாட்டில் உற்பத்தியான பொருள்களையே இங்கு விற்றனர். இங்கு ஏற்படுத்தப்பட்ட பெருந்தொழில்களையும் தாங்களே தொடங்கினர். அல்லது தங்கள்