பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஈரோடு மாவட்ட வரலாறு


பேருடைச் சிறப்புக்குக் கோயிலுக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. அதே கோயிலில் உள் 27ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோயிலுக்கு வடகரை நாட்டு அந்தியூரில் பெருங்குளத்தைக் கொடையாகக் கொடுத்து புள்செய் நிலத்தை நன்செய் ஆக்கி நான்கில் ஒருபாகம் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. இரவிகோதை 'க்ஷத்திரிய மௌலி சிகாமணி' எனப் புகழப்பட்ட வடமொழிச் சுலோகம் கல்வெட்டின் தொடக்கத்தில் உள்ளது.

கொடுமுடி மகுடீசுவரர் கோயிலில் உள்ள வீரநாராயண இரவி வர்மனின் 27ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கொடுமுடிக் கோயிலுக்கு ஊஞ்சலூரைக் கொடையாக அரசன் கொடுத்த விபரம் கூறப்பட்டுள்ளது. ஊர் வருவாயில் காரைக்கண்டன் துளை நிறை செம்பொன் 87 பொன் ஐந்தே மூன்று மஞ்சாடி குன்றியும், நெல் 345 கலம் தூணியும் கொடுக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ளது. கொடுமுடி "அதிராசராச மண்டலத்துக் காவேரி நாட்டுக் கரையூர்" என்று கூறப்பட்டுள்ளது. வீரகேரள அதிராஜராஜன், கேரள அதிராஜ ராஜ ஸ்ரீராஜராஜன் ஆகிய சேரமன்னர்களின் ஒருவர் பெயரால் கொங்கு நாடு 'அதிராஜராஜ மண்டலம்' என்று அழைக்கப்பட்டிருக்கலாம். பெருந்தலையூரில் சேரமன்னன் வீரநாராயணன் கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரமியம் கல்வெட்டில் கோவரகுண பராந்தகனும், பொன்னி வாடிக்கல்வெட்டில் கோக்கண்டன் ரவியும் 'சந்திராதித்யகுல திலக சார்வபூமன்" என்ற பட்டப் பெயருடன் குறிக்கப்படுகின்றனர். பொன்னி வாடிக் கோயிலுக்கு கோக்கண்டன் ரவியின் அடியான் திருநிலைகால் அளித்துள்ளான்.

ஈரோடு கல்வெட்டில் இரவிகோதை கோக்கலி மூர்க்கன் என்று குறிக்கப் பெறுகின்றான். இரண்டாவது கோனாட்டுக் கொங்குத் தலைவன் வீரசோழக் கலி மூர்க்கன், அவன் தந்தை கலிமூர்க்கன். வீரசோழக் கலிமூர்க்கன் தன் மனைவியை "நம் பிராட்டியார் வரகுண மகாதேவியார்" என்று குறிக்கின்றான். அவன் கோவரகுண பராத்தகன்