பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

9. சேரர் காலம்


(கி.பி. 10, 12, 13 நூற்றாண்டுகள்)

கோனாட்டுத் தலைவர்கள் ஈரோட்டுப் பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கிய பத்தாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் சேரர்கள் கொங்கு நாட்டில் புகுந்து அதிகாரம் செலுத்தித் தங்கள் பெயரில் கல்வெட்டுக்களையும் பொறித்தனர். கோவை மாவட்டத்திலும் பழனி வட்டாரத்திலும் அவர்கள் கல்வெட்டுக்கள் பல காணப்பட்டாலும் ஈரோடு மாவட்டத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. தென்கொங்கில் சேர வீரகேரளர் மரபு தொடர்ச்சியாக அதிகாரம் செலுத்தியது.

பொன்னிவாடி

- கோக்கண்டன் ரவி

ஈரோடு

- இரவிகோதை

கொடுமுடி

- வீரநாராயண இரவிவர்மன்

பெருந்தலையூர்

- வீரநாராயணன்

பிரமியம்

- வரகுண பராந்தகன்

கொல்லம்பாளையம்

-இரவிகோதை

அனுமன்பள்ளி

- இரவிகோதை

பூந்துறை

- கோரவிகோதை

ஆகியோர் ஆவணங்கள் ஈரோடு மாவட்டத்தில் கிடைத்துள்ளன.

கொல்லம்பாளையம் இரவிகோதை கல்வெட்டு கி.பி.948ஆம் ஆண்டுக்குரியது. தென்னவன் பேரரையனான வஞ்சிவேள் தாழி என்பவன் ஈரோட்டில் ஒரு ஏரி அமைத்தான். அந்த ஏரிக்குத் 'தாழி ஏரி' என்று பெயர் வழங்கியதாக அந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.

ஈரோட்டுத் திருத்தொண்டீசுவரர் கோயிலில் உள்ள இரவி கோதையின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ஆவணிப் பேரூரில் வெள்ளாளர் பில்லரில் விக்கிரம சோமயரையன் தன் மகனுக்கு அக்கன் சோமன் மாமணியாழ்வான் என்று பெயரிட்டு