பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

57


 10) இராசகேசரி குலோத்துங்கன் (1195-1207)

இவன் கல்வெட்டுக்கள் பட்டாலி, சாத்தம்பூர், சுத்தாங்கண்ணி, கொங்கூர், கொடிவேரி, திங்களூர், முத்தூர் ஆகிய வார்களில் கிடைக்கின்றன. திங்களூர்க்குளம் இவன் காலத்தில் வெட்டப்பட்டது. தேரையூர் குலோத்துங்க சோழநல்லூர் எனப்பட்டது. சாத்தம்பூர்க் கல்வெட்டில் 'அறியாயம் அழிபிழை செய்தாரை வெட்டுதல் குத்துதல் செய்தால் அவர்கட்குத் தண்டம் தலைவிலை இல்லை' என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

11) இராசகேசரி வீரராசேந்திரன் (1207-1255)

இவனது கல்வெட்டுக்கள் அலங்கியம், ஒலகடம், கண்ணபுரம், கத்தாங்கண்ணி, கீரனூர், குண்டடம், கொங்கூர், சத்தியமங்கலம், சர்க்கார்பெரியபாளையம், கொளிஞ்சிவாடி, கொடிவேரி, தாராபுரம், திங்களூர், பட்டாலி, பட்டிலூர், பிரமியம், பொன்னிவாடி, முத்தூர், வள்ளிஎறிச்சில், விசயமங்கலம் ஆகிய பல ஊர்களில் கிடைத்துள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்குச் சோழர் கல்வெட்டுகள் 19Cஇல் 100 கல்வெட்டுக்கள் வீரராசேந்திரன் காலத்தவையாகும். இவனும் 'இருகொங்கும் ஆண்ட' என்று புகழப்பட்டான். இரண்டாம் குலோத்துங்கன், வீரராசேந்திரன் ஆகியோர் பேரரசுச் சோழர் தொடர்பைக் குறைத்துக் கொண்டு பாண்டியருடன் நெருங்கிய உறவு கொண்டனர். கொங்குச் சோழர்கள் பாண்டியரை 'மருமகன்' என்றும், பாண்டியர் கொங்குச் சோழரை 'மச்சுனன்', 'மாமடி' (மாமா) என்றும் கல்வெட்டில் குறித்துக் கொள்கின்றனர்.

விசயமங்கலம் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் சித்திரமேழி விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. இவன் 'உலகுடைய பெருமாள்" என்றும் அழைக்கப்பட்டான். மனைவி உலகுடைய பிராட்டியார், மகன் நச்சினார்க்கினியன் ஆன கண்டியதேவன் என்பவன்.

12) பரகேசரி விக்கிரம சோழன் (1255-1256)

இவன் கல்வெட்டுக்கள் குன்னத்தூர், பட்டாலி, பரஞ்சேர்வழி, பொள்ளிவாடி, திங்களூர், விசயமங்கலம் ஆகிய ஊர்களில் கிடைக்-