பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஈரோடு மாவட்ட வரலாறு


கின்றன. இவன் "திருச்சிற்றம்பலமுடையான்" என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவன். இவனுடைய உயர் அலுவலன் ஒருவன் 'பெருமாள் முதலிகளில் கூத்தன் யாழ்வல்லான் ஆன உதயசிங்கதேவன்' என்பவன்.

13) பரகேசரி விக்கிரமசோழன் (1273-1904)

இவன் கல்வெட்டுக்கள் ஓலகடம், திங்களூர், பட்டாலி, பொன்னிவாடி, விசயமங்கலம் ஆகிய ஊர்களில் கிடைத்துள்ளன. வீரராசேந்திரன் காலத்தில் கொடை கொடுக்கப்பட்டு கல்வெட்டாத சில ஊர்களில் "வீரராசேந்திர தேவர் நீர் வார்த்தபடிக்கு" என இவன் காலத்தில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டது.

பொது

கொங்குச் சோழர் காலத்தில் பல கோயில்கள் திருப்பணி செய்யப் பெற்றன. அவை சோழீசுவரம் எனப்பட்டது. முதல் மூன்று கொங்குச் சோழர் காலத்தில் கொடைகள் ஊராரிடமும், ஊர்ச் சபையிடமும் அளிக்கப் பெற்றன. சிவப்பிராமணர்கள் கோயில் காணியாளர்களாக நியமிக்கப்பட்ட பின்னர் "குடமும் குச்சியும் கொண்டு கோயில் உள்புகுவார்" ஆகிய சிவப்பிராமணரிடமே எல்லாக் கொடைகளும் அளிக்கப்பட்டன. ஒரு கல்வெட்டில் காணி பற்றி விளக்கப்படுகிறது. குரக்குத் தளி ஆளுடைய நாயனார். தென்னூர் ஆளுடைய நாயனார் ஆகிய கோயில்கட்கு வீரராசேந்திரச் சக்கரவர்த்தி பட்டன் காணியாளனாக நியமிக்கப்பட்டான். பூசையும். தேவகன்மிப் பேறும், எழுவன முளைப்பன உரிமையும், திருமடை விளாகத்து வேண்டும் குடிகளைக் குடியேற்றிக் கொள்ளவும். மன்றாட்டு முதன்மை பெறுதல், பண்டாரச் செலவு செய்யும் உரிமை ஆகியன கோயில் காணியுரிமை எனப்பட்டது.

அலுவலர்களும், சிவப்பிராமணர்களும் பலர் அரசன் பெயரைப் பெற்றனர். கொங்குச் சோழர் காலத்தில் ஏரானமான பெண்கள் கொடை கொடுத்தனர். பிற நாட்டவரும் அரசுப் பணியில் இருந்தனர். வீரராசேந்திரன் கல்வெட்டில் "பெருமாள் சாமந்தரில் துங்கன்