பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறுத்தி, அவர்களுக்கு எதிரில், 80 அடி தூாரத்தில் முடிவெல்லைக் கோடு ஒன்றையும் போட்டிருக்க வேண்டும் ஒவ்வொரு அணிக்கும் முனர்பு, 10 அடி குர்ரத்தில் இருப்பது போல 8 கரளா கட்டைகளை நிறுத்தி வைத்திருக்க வேண்டும். -- விசில் ஒலிக்குப் பிறகு அணியில் முதலில் இருப்பவர், கரளா கட்டைகளை சுற்றி குறுக்கு நெடுக்காக ஒடியபடி எல்லைக்கோட்டைக் கடந் து = ஒடி, திரும்பி வருகிற போதும் குறுக்கு நெடுக்காக ஓடிவந்து தனக்கு அடுத்து நிற்பவரைத் தொட, அவரும் அப்படியே குறுக்கு நெடுக்காக ஒடித் திரும்பி வர, கடைசி ஆட்டக்காரர் ஓடி முடிக்கும்வரை ஆட்டம் தொடரும். - முதலில் ஓடி முடிக்கிற குழுவே, வெற்றி பெற்றதாகும் 3. LTubøusil 'll th (Snake Relay) மாணவர்களை 4 சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரித்து, ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் நிறுத்தியிருக்க வேணடும். ஒவ்வொரு குழுவிற்கும் எதிரே, 10 அடியில் இருந்து தொடங்கி, 10 அடி இடைவெளிக்கு ஒன்றாக, 5 கரளா கட்டைகளை நிறுத்தி வைத்திருக்க வேண்டும். Fr - * விசில் ஒலித்ததும், முதல் ஆட்டக்காரர் கரளா கட்டைகளுக்கு இடையே வளைந்து வளைந்து மாறி மாறி ஒடி (Zig zag) கடைசி கரளா கட்டையைக் கடந்ததும், பினர்புறமாகவே மாறி மாறிக் கடந்து, தனர் இருப்பிடத்திற்கு வந்து, தனக்குப் பின்னால் நின்ைறவரைத் தொட, அவர் முனி ஆட்டக்காரர் போல் ஒடி முடிக்க, இதுபோல், கடைசி ஆட்டக்காரர் முடிக்கும் வரை, ஆட்டம் தொடரும். - முதலில் ஓடி முடிக்கிற குழுவே வென்றதாகும்.