பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 உன்ரஙடைக் கோவை என்று அவள் கண்ணோக்கத்தால் காதல் வயப்பட்டுப் பிரிந்த சீவக குமரன், தனித்திருந்து தன் உள்ளத்தில் திகழும் அவள் அழகிய உருவத்தை ஓவியத்தில் வரைய எண்ணினான். அவள் உடலுறுப்புக்கள் ஆடை யணி முதலியவற்றின் நிறவேற்றுமைகளுக்கு, அவ்வந் நிறத்து இரத்தினங்களைப் பொடித்துக் கரைத்துப் பசை பூட்டி வண்ணக் குழம்பாக்கி, அக்குழம்பில் துகிலிகை யைத் தோய்த்து ஓர் ஆடையில் ஓவியம் எழுதுவானாயி னான். அங்ஙனம் எழுதுங்கால், அவள் யானைக்கு அஞ்சி மேற்கொண்ட நடுக்கமும், அந் நிலையில் தன்னை நோக்கிய காதல் நோக்கமும் அவ் வடிவில் ஒருங்கு புலப்படத் தீட்டினான் என்று கவி திறம்படக் கூறு கின்றார். கூட்டினான் பணிபல தெளித்துக் கொண்டவன் தீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் வேட்டமால களிற்றிடை வெருவி நின்றதோர் நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே." இப்பாட்டில் ஒன்றுக்கொன்று முரணாகவுள்ள அச்சத்தையும் காதலையும் ஒரு வடிவிற் புலப்படுத்திய தாகச் சீவகனது ஓவியநூற் றிறமையை ஆசிரியர் கன்கு புலப்படுத்தியுள்ளார். இச்சித்திரத்தில், நங்கை யின் காட்சியில் தான் திளைத்து மேற்கொண்ட காதற் பெருக்கே இங்ஙனம உள்ளபடி வரைதற்குக் கருவி யாயிற் றென்பது தெளியத் தக்கது. இங்ஙனம் கண்ணனார்க்கும் இன்னதென்று வாக்கால் உரைக்க இயலாத காதலின் இயல்பை ஒத்த காதலர் இருவர் தம்முட் கூடுதற்கு முன்னும், கூட்டத்தின்பின் பிரிவு நேர்ந்த இடத்தும் பிறர் வாயிலாகவன்றிக் கடிதமூலமாக ஒருவருக்கொருவர்