பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 காதற் கடிதங்கள் புலப்படுத்திக் கொள்ளுதல் முற்காலத்தும் நிகழ்ந்த துண்டு. காப்பியச் சுவை நலத்தில் திளைத்துப் பாடும் கவிகள் மூலமாகவே அக் காதற் கடிதங்களின் இயல்பு களை வெளிப்படக் காணலாம். காதலர் இருவர் கருத்தொருமித்துப் பிறர் அறியாவாறு தம் உள்ளத்து நினைவுகளை வெளிப்படுத்துள்ளாரா மறைமுகமாக யினும், அச்செய்தியை நம்மனோர் அறிவிற்கு விருந்தாக வெளிப்படுத்து அளித்து இன்புறுத்தியவர்கள் புலவர் பெருமக்களே யாவர். இங்கே வடமொழியிற் சிறந்த காளிதாச மகா கவியும், செந்தமிழ் மொழியிற் சிறந்த இளங்கோவடிகள் என்னும் புலவர் பெரு மானும் முறையே தாம் மேற்கொண்ட "சாகுந்தலம்" என்னும் சுவை மலிந்த நாடகத்தினும்'சிலப்பதிகாரம்" என்னும் தீந்தமிழ்க் காப்பியத்தினும் காதற் கடிதங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். இவ்விரு பெருங்காப்பியங்களினும், அக் கடித் மெழுதினார் இருவரும், பெண்மக்களேயாவர். இவருள் சகுந்தலை யென்னும் பெண்மணி, துஷ்யந்தன் என்னும் வேந்தர் பெருமானைக் கானகத்திற் கண்ட அளவிற் காதல் வயப்பட்டு, அந்நிலையை எவ்வாறு அரசற்குப் புலப்படுத்தலாமென்று, ஆராய்ந்து கொண்டிருக்குங் கால், தன் உயிர்த் தோழியா லறிவிக்கப்பட்டு காதற் கடிதம் எழுதத் தொடங்கினாள். இஃது அக்காதல ரிருவரும் தம்முட் கூட்டம் நிகழ்த்துவதற்கு முன் நிகழ்ந்தது. சிலப்பதிகாரத்துக் கண்ட மாதவி யென் னும் நங்கையர் திலகம் கோவலனோடு கூடி இன்புற்று ஒருகாரணத்தால் அவன் தன்னைப் பிரிய நேர்ந்த பொழுது, அப்பிரிவாற்றாமையைப் புலப்படுத்து முக