பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் அன்னை வாயிலாகக் கேட்டு மழலை மொழிந்து தேறிய பின்னரே அக் குழந்தை அப்பனாலும் ஆசிரியனாலும் வரிவடிவிற் பயிற்றப்பட்டு அறிவு விரிவெய்தப்பெறும். ஒருவன் இறைவனை அடைந்து பேரின்ப நுகர்ச்சியில் தலைப்பட விழையுங்கால், அங்கும் அருளுருவாகிய தாயே முதற்கண் இவனைப் பண்படுத்தி அப்பனாகிய இறைவனை அறிவித்து அவன்பால் உய்ப்பவளாவள், இதனை,"மெய்யருளாம் தாயுடன் சென்று பின் தாதை யைக்கூடிப் பின் தாயை மறந்து, ஏயுமதே நிட்டை' என்னும் முற்றத் துறந்த முனிவர் பெருமானாகிய பட்டினத்து அடிகள் அருண்மொழியாலும் உணர்க. தாய்வழியாகத் தந்தைக்கு ஆளாதலை யுணர்ந்தே, முதற்கண் தாயைக் குறிப்பிட்டு மணிவாசகப் பெருந் தகையாரும், "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே' என்று திருவாய் மலர்ந்தருளினார். இத் தமிழ்நிலத்து மக்களாகிய நம்மனோர்க்கு நம் அன்னையரால் முதற்கட் பாலொடு குழைத்து அன்போடளாவி ஊட்டிய அருமை மொழி அந்தமி லின்பம் ஆர்தரப் புரியும் செந்தமிழ்மொழியேயாமன்றோ! அன்னையார் அரு ளொடு சுரக்கும் இனிய பாலை உண்ணுங் குழவிப் பருவத்தில், அவராற் பயிற்றப்பட்டுப் பயிலும் சிறப் புப்பற்றி யன்றே இம்மொழி "பால்வாய்ப் பசுந்தமிழ்' என்று பாராட்டப்படுகின்றது. மழவிளம் பருவத்திற் பயிற்றப்படுதல் குறித்தே இதனைப் 'பசுந்தமிழ்' என் றார் போலும். இயற்கையும் அன்னதே. இதனால், நம் உடல் பாலுண்டு வளரும் பருவந்தொட்டே, உடற்கண் உறையும் உயிர், தன் குணமாகிய அறிவைச் செந் தமிழ்த் தெய்வமொழிப் பயிற்சி வாயிலாக வளர்த்துத் 8