பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை திகழும் உண்மை நமக்குப் புலனாகின்றது. அறியாப் பருவத்தினும் நம் உயிர்க்கு உறுதுணையாக நின்று அறிவுச் செல்வத்தை வளர்வித்து உதவிவரும் தமிழ் மொழியின் பழமையையும் சிறப்பையும் என்னென்று கூறுவேன்! அவை வரையறுத்துக் கூறுவதற்கு இயலா தனவெனினும், அறிந்தாங்கு ஒரு சிறிது கூறத் தொடங்குகிறேன். 2. தமிழ் மொழியின் தொன்மை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றி இற்றைஞான்று நம் கைவரப்பெற்ற தமிழ் நூல்க ளெல்லாவற்றினும், காலத்தானும் சிறப்பானும் முற் பட்டு விளங்குவது ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியம் என்னுந் தலையாய இயல்நூலே யாகும். இது கூடலின்கட் பண்டு நிலவிய முச்சங்கத்துள், தலைச்சங்க காலத்தில் தோன்றியதென்பது யாவரும் உணர்வர். இந்நூலின்கண் தமிழ் வரம்புகண்ட தண்டமிழ் முனிவ ராகிய தொல்காப்பியர், வடநூலார் நான்கென வகுத்த உறுதிப் பயன்களை அகம் புறமென இரு பிரிவினுள் அடக்கி, மக்கள் இம்மைய் பயனாக நுகர்தற்பாலதாய் இன்ப நிலையை அகத்தினும்,மறுமைக்குரியதாக எய் தற்பாலதாகிய அறநிலையினையும், அதற்குக் கருவியாகிய பொருள் நிலையையும், இம் மூன்றன் நிலையாமையையும் உணர்ந்து ஒருவி அடைதற்பாலதாகிய அந்தமிலின்பத் தழிவில் வீடாகிய உறுதி பயக்கும் வாயிலையும் புறத் தினும் ஒழுங்குற வகுத்து விளக்கியுள்ளார். இங்ஙனம் மக்கள் ஒழுகலாற்றைத் திறம்பட நுனித்துணர்ந்து பலபட விரித்துரைத்தலோடு மற்றை