பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் உயிர்த் தொகுதிகளின் இயற்கைகளையும், நிலையியற் பொருளாய் மரம் முதலியவற்றின் இயல்புகளையும், நிலப்பகுதிகளின் பான்மைகளையும், மற்றை இயற்கைப் பொருள்களின் தன்மைகளையும் ஆராய்ந்துணர்வார்க் குப் புலப்படும்படிக் திட்பநுட்பம், கூறியிருக்கும் வேறு எம்மொழி இயல்நூலார்க்கும் இயலாத தொன்றாம். ஒரு மொழிக்கு இலக்கணங் காணப் புகும் ஆசிரியர் அம் மொழிக்கண் உள்ள 'எழுத்து', 'சொல்' என்னும் இவற்றையே ஆராய்ந்து தூய்மைப் படுத்துவர். இவ்வியல்பு பிறமொழி இயனூலார் யாவர்க்கும் ஒத்ததாகும். நம் செந்தமிழ்த் தெய்வ மொழியின் இயன் முதனூல் ஆசிரியரோ மொழியாளர் எல்லோர்க்கும் பொதுவாகிய எழுத்துச் சொற்களின் ஆராய்ச்சிகளோடு அமையாது, சொல் கருவியாக உணரப்படும் பொருளாராய்ச்சியிற் பெரிதும் தலைப் பட்டு அப் பொருளைக் கூரறிவாளர் எத்துணைப் பாகு பாடு செய்து உணர விரும்புவரோ அத்துணைப் பகுப் புக்களும் அமைய மக்களின் ஒழுகலாற்றையும் பிற இயங்கியல் நிலையியற் பொருள்களின் தன்மைகளையும் தெள்ளத் தெளிய விளக்கியுள்ளார். 5 60 இப் பொருளதிகாரத்திற் கண்ட கந்தழி முதலிய சொற்களை ஆராய்வோமாயின் அந்நூற் காலத்துத் தமிழரின் கடவுட் கொள்கை நன்கு புலப்படும். ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொரு "ளாகக் கடவுளைத் தமிழர் ஆராய்ந்து தெளிந்துள்ளா ரென்பது அதனாற் புலனாம். தொல் காப்பியர் தமிழ் நிலத்தார் ஒழுக்கங்கண்டு நூல் செய்யுங் காலத்துத் தமிழர் நிலை இத்துணை மேம்பாடுற்