பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைகடைச் கோவை இருக்குமாயின் அதற்கு முன் எத்துணையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் தத்துவ ஆராய்ச்சி யில் தலைப்பட்டிருத்தல் வேண்டும். நாள்வினைகளைச் செல்வீதின் இறுக்கப் பணிக்கும் அற நூல்களின் விழியொழுகிப் பண்படுத்தப்பட்ட உள்ள நிலையுடையா நன்றே முடிவில் தத்துவ ஆராய்ச்சியில் தலைப்படுவர்? அங்ஙனம் தலைப்படுவாரும் கடவுட்குப் பல்வகைப் பொருந்தா இலக்கணங்களைக் கண்டு ஒருவரோடொரு வர் தம்முண் முரண்படுவர். அம் முரண்பாடறத்துக் கடவுட் பொருளின் தூய இயல்நிலையை உள்ளவா நுணாவார் மிகவும் அரியர். இவ் வரிய உணர்ச்சியைத் தமிழா எத்துணையோ ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே எளிதிற் கைவரப்பெற்று ஒழுகினரென்பது அத்தொல் காப்பிய முதுநூலிற் கண்ட உண்மைத் தெளிவாகும். இதனால், தமிழின் பழமை காலத்தான் அறுதியிட்டுரைத் தல் அரிதென்பது போதரும். புதிய முறையில் ஆராய்ச்சி-செய்வாருள் நுண்மாணுழைபுல மிக்கார் சிலர்க்கும் இஃது உடன்பாடேயாகும். ál தொன்மை வரலாற்று முறையில் நோக்கினும் இதன் பழமை புலனாகும். ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பழம் பொருளாகிய இறைவன், மக்கள் ஆண்பெண்களாக இயைந்து இன்ப நுகர்ச்சியில் தலைப்படும்பொருட்டு அருள்வழி உருக்கொண்டு பொற்கோட்டிமயத்தின்கண் மலைமகளை வேட்ட ஞான்று, அமரர் முதலியோ ரனைவரும் ஆங்கு ஒருங்கு தொக்காராகத் தென்பால் உயர்ந்து வடபால் தாழ்ந்தமையின், அது கண்டு அப் "