பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் பெரியோன், நிலப்பரப்பின் சமனிலை குறித்துக் குறு முனியை நோக்கிப் பொதியிற்கு ஏகென, அம் முனிவர் பெருமான் முழுமுதற்பிரானை வணங்கி, "ஐயனே ! தெற்கணுள்ளார் தமிழ் மொழி வல்லாரன்றே. அவருவப்ப யான் அம் மொழிப்பயிற்சியிற் பீடுபெறுதல் எங்ஙனம் ?" என வேண்ட, இறைவன் அதுகாலைக் குடமுனிக்குத் தமிழறிவுறுத்தா ரென்பது கந்தபுராண கதை. இப்புராண வரலாற்றை நம்புவார்க்குத் விரித்துரைத்தல் தொன்மையைப்பற்றி தமிழின் மிகையே. 7 3. தமிழ் மொழியின் சிறப்பு இனி, இங்ஙனம் தொன்மையான மாண்பு மிக்க இம் மொழியின் சிறப்பைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். ஒரு மொழிக்குச் சிறப்பு அதன்கண் அமைந்துள்ள சிறந்த இலக்கியம், இலக்கணம், சமயம் முதலியவை பற்றிய நூற்பரப்புக்களானும், பிறிதொன்றன் சார்பு வேண்டாது புலவர் கருதும் எத்தகைய அரும்பொருள். களையும் வழங்குதற்குரிய சொற்க ளுடைமையானும், பிறவற்றனுமாம். இன்னோரன்ன சிறப்புக்களில் நம் தமிழ் மொழி யாதுங் குறைவுடைய தன்று. இது மற்றொரு மொழியினின்றும் தோன்றியதென்றாதல், பிறிதொன்றன் சார்பின்றி நடைபெறாதென்றாதல், கூறுவார் உண்மை யாராய்ச்சி யிலராவர். ஆனால், தொல்காப்பியர் காலந்தொட்டே வட சொற்களுட் சில தமிழில் வழங்கலாயின. அதுபற்றித் தொல்காப்பியரும்,