பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. குறுந்தொகை IL ஆக. வைக்கலாமோ வெனின், சென்றதற்கு இரங்குகின்றா னாதலின் தற்புகழ்தல் ஆகாதென்பது கருத்து. இங்கே, "ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு" என்னுந் திருக்குறளும், ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென்பீடு என்பதனாற் பெறப்பட்ட தற்புகழ் தலைப் பரிகரித்தற்கு. 'கழிந்ததற் கிரங்கலின் தற்புகழ் தல் அன்றாயிற்று" என்று கூறிய பரிமேலழகர் உரைப் பகுதியும் ஒப்பு நோக்கி இன்புறத்தக்கன. இங்ஙனம் பாங்கன் கேட்டதற்குத் தலைமகன் இறுத்த விடையை ஏற்றுக்கொள்ளாமல், பாங்கன், பேராற்றல் படைத்த நீ ஒரு சிறுமகளால் இத் தன்மையை யாதல் நின் பெரு மைக்கு இழுக்காகுமென்று இடித்துரைத்தானாக, அக் கழற்றுரையைத் தலைமகன் மறுத்துரைக்கு முகமாக ஒரு பாடலுள்ளது. அஃது, . 181 இடிக்குங், கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே" என்பது. இதன்கண் ஓரழகிய உவமை எடுத்தாளப் பட்டது. கதிரவனது கடும் வெயில் எறிக்கும் வெப்பத்தையுடைய பாறையின் கண்ணே, கையில்லாத ஊமன் தன் கண்ணினாலே பாதுகாக்கும்படி வைக்கப் பட்ட வெண்ணெய் உருகுதல்போல இக் காதல் பரந்துளது; பொறுத்தற் ஊமன் இலக்கணத்தைச் சிந்தாமணியாசிரியர், கரிதாயிற்று என்பதாம்