பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 உரைஈடைக் கோவை 'கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கை " என்று கூறினர். பிறர் கையினாற் கூறுஞ் செய்திகளை ஊமன் தன் கண்களாற் கேட்குமெனவும், பேச இயலாமையினால் நினைந்த கருத்துக்கள் அளவில்லன் வாக உள்ளத்தில் நிறைந்திருக்கு மென்பது கருதி மொய்கொள் சிந்தையின் மூங்கை' எனவுங் கூறினர். இங்ஙனம் பேச இயலாமையோடு கையுமில்லையானால், வெண்ணெ யுருகிப் பரத்தலைக் கண்ணினாற் கண்டும் பிறர்க்குத் தெரிவிக்க இயலாமையோடு அவ்வெண் ணெயைப் பெயர்த்தெடுத்துப் பிறிதோரிடத்து வைக் கவும் அவ்வூமற்கு இயலாதாம். அதுபோல, இந் நோயைப் பொறுக்கவும் பிறர்க்கு வெளிப்படுத்திக் கூறி ஆறுதலடையவும் இயலாதவனாயினே னெனவும். என்னை இடித்துரைக்கு நண்பரே இதனை நும் காரிய மாக நிறுத்தலைச் செய்யின் நன்றாமெனவும் தலைமகன் கூறினானென்பது இப் பாடற் கருத்து. இத்துணையும் உவமை நயங்கள் ஒருவாறு புலப்படுக்கப்பட்டன. 2. குண வருணனை இனி, ஒரு குணத்தை யெடுத்துச் சிறப்பித்துக் கூறுங்கால், அதற்குப் பேரெல்லையாக எம்மட்டிற் கூறலாமோ அத்துணையுங் கூறி அக் குணத்தின் பெருமையை விளங்கவைத்தலை இந் நூலிற் பல விடத்துங் காணலாம். தலைமகள் தன் காதலனோடு மேற்கொண்ட நட்பைப்பற்றிக் கூறும்போது தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று, நீரினு மாரள வின்றே' என்று கூறியதாக ஒரு பாடற் பகுதி காணப் 66 நிலத்