பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 உரைஈடைக் கோவை ..... வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே " என்னுந் திருவாசகப் பகுதி ஈண்டு நினைந்து இன்புறத் தக்கது. இங்கே நுண்மை ஒன்று மிகுதியாகக் கூறப் பட்டுள்ளது. அதற்குக் காரணம் அணுவினும் அணுவாய் நிற்கும் இறைவனிலக்கணம் இந் நட்புக் குணத்திற்குப் பொருந்தாது என்பதே. 3. தேற்று முறை ஒருவர்க்கு ஆற்றொணாத் துயரம் நேர்ந்தவிடத்துத் தேற்றப் புகுவார், துயரமுற்றார் உள்ளத்துட் பதியு மாறு ஆறுதல் மொழி கூறவேண்டும். அங்ஙனங் கூறப்படு மொழியும் உண்மையாக இருப்பின் நலமாம். இந் நிலையில் தலைமகனுடைய பிரிவு கருதி வேறுபட்ட தலைமகளுக்குத் தோழி ஆறுதல் கூறுமுகமாக ஓர் இனிய பாடல் இங்கே காணப்படுகின்றது. அது, வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவ ருயிரென நமக்குரைத் தோருந் தாமே அழா அல் தோழி அழுங்குவரி செலவே" என்பதாம். ஓரமயம் பொருளீட்டக் கருதிய தலை மகன் அச்செய்தியை வெளிப்படையாகக் கூற அஞ்சிக் குறிப்பிற் புலப்படுத்த நினைந்தான். உண்மைக் காத லன் எக்காரணத்தை முன்னிட்டேனும் தன் உயிரனைய காதலியைப் பிரியநேரின் அச் செய்தியை வெளிப்படக் கூறினால் அவள் ஆற்றொணாத் துயர மெய்துவாளென் றெண்ணி முதலில் ஒருவாறாகத் தன் எண்ணத்தை அவள் அறிந்துகொள்ளுமாறு குறிப்பிற் புலப்படுத்