பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை என்னுஞ் செய்தியால் அறிகின்றோம். நிலையியற் பொருளும் மடைப்பள்ளியாகிய பொருளுந் தமிழ் மகளிர் கற்பிற்குச் சான்றாகுமாயின், இயங்கியற் பொருளாகிய காரையைக் குறித்தது பொருந்தாதென்று எங்ஙனம் எண்ணலாம்? 6. காதலின் இயல்பு மரமாகிய செயற்கைப் மகளிர், தம் உண்மைக் காதல் வயப்பட்ட காதலர் எக்காரணத்தாலாவது தம்மொடு அளவளாவு தலில் தவிர்ந்தொழுகுவராயினும் அக்கணவன்மா ரிடத்துள்ள உண்மை அன்பிற் சிறிதுங் குறைபாடில் ராய் ஒழுகும் இயல்பினர் என்பதை இந் நூலிற் பரக்கக் காணலாம். இச்செய்திக்கு எடுத்துக் காட்டாக, "குறுந்தாட் கூதளி" என்னுந் தலைப்புடைய பாடலும், 'தச்சன் செய்த சிறுமா வையம்" என்னுந் தலைப் புடைய பாடலும் குறிப்பிடத் தக்கன. முறையே அப்பாடற் கருத்துக்கள் வருமாறு:- ஒருயர்ந்த மலையில் பெரிய தேனடையைக் கண்ட ஒரு முடவன் அதனைப் பெறுவதற் கியலாமையால் தன் உள்ளங் கையைச் சிறிய கொள்கலமாகக் குவித்து அம்மலை யின் கீழிருந்தபடியே அத்தேனிறாலைப் பல முறை சுட்டித் தன் கையையே நாவினாற் றுழவி இன்புறுதல் போலக், காதலர் நல்கார் நயவாராயினும் யான் அவரைப் பலமுறை காண்டலும் என் உள்ளத்திற் கினிதாகும்' என்பதும், 'சிறு குழந்தைகள் தாம் உருட்டி விளையாடுஞ் சிறு வண்டியை ஏறிச் செலுத்தி இன்புறா ராயினும் அவ்வண்டியை இழுத்து நடத்தி அவ்வின்பத்தை அடைதல் போல, என் கணவரை 9 (