பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 உரைநடைக் கோவை மெய்யுற்று இன்பம் அடையப் பெறேனாயினும் அவரது நட்பை மேன்மேலும் பெருக வளர்த்து இன்பம் அடைந்தேன்' என்பதும் ஆம். குறிக்கப்பட்ட காதற் பண்புகள் எத்துணைச் சிறப் புடையனவாகக் காணப்படுகின்றன என்பது உணர்ந் தின்புறத்தக்கது. இங்கே அறிஞர்களே ! இதுகாறுஞ் சங்கத்துச் சான்றோர்களின் இலக் கியப் பெருமையும், அவற்றுள் குறுந்தொகை என்னும் அழகிய நூலின் மாண்பும் ஒருவாறு புலப்படுத்தப் பட்டன. இலக்கியச் சுவையே தம் வாழ்க்கை நலமெனக் கொண்டு துய்த்தின்புறும் உணர்வுடைப் பெருமக்கட்கு, இன்ப வூற்றாகவுள்ள இன்னோரன்ன நூலாராய்ச்சிகள் தேவ ரமிழ்தினுஞ் சிறந்த சுவை. இதுவரை பொறுமையோ டிருந்து செவி சாய்த்த நும் எல்லோர்க்கும் என் வணக்கத்தை உரிமைப் படுத்துகின்றேன். இம்மட்டில் யான் தரும் சிறு சுவை விருந்தை நிறுத்தி, ஏனை அறிஞர்கள். இந்நூன்முகமாகத் திரட்டி வைத்திருக்கும் பெரு விருந்தை நீவிர் துய்க்குமாறு நும்மையும், வரையாது வழங்குமாறு என் நண்பர்களாகிய சொற்பொழிவாளர் களையும் வேண்டுகின்றேன். பயப்பனவாம். தமிழ் மொழி நீடு வாழ்க ! -