பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 உரைநடைக் கோவை உதயகுமரனை வாளாலெறிந்து கொன்றான். இச் செயலை அறிந்த உதயகுமரன் தந்தையாகிய அரசன், தன் மகன் கொலைப்பட்டது குறித்துச் சினமுடைய வனாய் மணிமேகலையைச் சிறைப்படுத்தினான். அவ்வரசன் மனைவியாகிய இராசமாதேவி என் பாள், மணிமேகலைக்கு நலஞ்செய்வதாக வெளிக்காட் டித் துன்புறுத்தும் நினைவுடையளாய் அவளைச் சிறையி னின்றும் விடுவித்து, மயக்கு மருந்தை உணவிற் கலந்து ஊட்டியும், புழுக்கறையில் அடைத்தும், காமு கன் ஒருவனை விடுத்துப் பழியுண்டாக்க முயன்றும் பல வாறு கொடுமை செய்தனள். மணிமேகலை இக்கொடுந் துன்பங்களை யெல்லாம் பொறுத்துக்கொண்டு, தான் எய்திய சில சித்திகளால் அவ்விடையூறுகளைக் கடந்து, சிறிதும் வாட்டமின்றி இருந்தனள். இந்நிலை அறிந்த இராசமாதேவி அச்சமுற்று, 'மகனை இழந்த துன்பம் பொறுக்கலாற்றாது இத்தீங்குகளைச் செய்தேன், மணிமேகலையை பொறுத்தருளவேண்டும்' என்று வேண்ட, மணிமேகலை அவள் துன்பத்தை யொழிக்கு முகமாக உண்மைப் பொருளை மனங்கொளத் தெருட்டி அருளறத்தைக் கடைப்பிடிக்கச் செய்தனள். மகனது இறப்பால் துயருறும் இராசமாதேவிக்கு மணிமேகலை கூறிய பொருளுரையால் அவளறிவு எவ் வளவு தெளிந்த நிலையிலுள்ள தென்பது புலனாம். உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் றன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே? உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது