பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்" என்பது அப்பொருளுரையாம். இதன்கட் குறிக்கப் பட்ட பொருள், 'உடல் ஒழிந்ததற்கு அழுதேனென்றால், அவ்வுடலைச் சுடலையில் இடக்கொடுத்தது யார்? நீயன்றோ? அன்றி, உயிர் நீங்கியதற்கு அழுதேனென் றால், அவ்வுயிர் நித்தியமாகலின் அது செய்த வினைவழி ஓர் உடல் எடுத்திருக்கும்; அவ்வுடல் இன்னதென நம்மால் தெரிந்துகொள்ளுதல் அரிது; அவ்வுயிர்க்கு அன்பு செய்ய விரும்பின் உலகத்துள்ள எவ்வுயிர் களுக்கும் இரங்கல் வேண்டும்; அங்ஙனம் இரங் குவையாயின், பலவாகிய அவ்வுயிர்த் தொகுதிக ளுள், நின்மகன் உயிரும் ஒன்றாமாதலின் அதற்கு அன்பு செய்தனை யாவை' என்பதாம். இங்ஙனம் அவள் துயரம் ஒழிதற்குரிய நெறியைக் காட்டி, அதன் முகமாக அருளறத்தை மேற்கொள்ளச் செய்த மணிமேகலையின் தெளிந்த நுண்ணறிவுத் திறனும், அருளறத்திலுள்ள விருப்பமும் பாராட்டத் தக்கன. இவள் உபதேசச் சிறப்பைக்குறித்து, 'மகனை இழந் தமையால் நேர்ந்த துயரமாகிய நெருப்பு, மனம் விற காகப் பற்றி உள்ளத்தைச் சுடுதலின், ஞானமாகிய நல்ல நீரைத் தெளித்து அவித்தனள் என்னும் பொருள் தோன்ற, 66 ஞான நன்னீர் நன்கனந் தெளித்துத் தேனா ரோதி செவிமுதல் வார்த்து மகன்றுயர் நெருப்பா மனம்விற காக அகஞ்சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப ' என்று ஆசிரியர் பாராட்டியுள்ளார். 187 >