பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 உரைகடைக் கோவை இஃதன்றி, மணிமேகலை தன் ஆற்றலால் அந் நகரத்துள்ள சிறைச்சாலையை அடைந்து தண்டிக்கப் பட்டுப் பசியால் வாடிய மக்களுக்கு வேண்டுமளவு உணவளித்தும், அவர்களுக்கு அறிவுரை பகாந்தும் அச்சிறைச்சாலையை அறச்சாலை யாக்கிப் பலவகைப் புண்ணியச் செயல்களும் நடைபெறும்படி அரசனைக் கொண்டு செய்வித்தனள். இக்காலத்தில் சிறைச் சாலையைச் சீர்திருத்துவதற்கு முற்படும் விருப்ப முடைப் பெரியோர்களுக்கு இம்மணிமேகலையின் அருஞ்செயல் வழிகாட்டியாக உள்ளதாகும். தனக்குப் பலவகைக் கொடுஞ் செயல்களால் தீங்கிழைத்த இராசமாதேவியை வெறாது, அவள் அறியாமையை ஒழித்து, அவளை நல்வழிப்படுத்திய பேருதவியை நினைக் குங்கால் திருவள்ளுவ தேவர் அரிதினாராய்ந்து கூறிய, 66 44 இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் " இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு ' " என்னுந் திருக்குறள்கள் நம் நினைவின்முன் நிற்பன வாம். ஒருவன் தனக்குத் துன்பஞ் செய்தார்க்கு அவர் நாணும்படி நன்மை செய்தலே அவரைத் தண்டித்த தாகும் என்னும் பொருளுரை மணிமேகலை வாழ்க் கையில் தலைநின்று விளங்குவதொன்று. இங்ஙனம் மணிமேகலை தன் வாழ்நாளிற் பெரும்பகுதியைப் பிறர்க்கு நலம் செய்தலிலேயே கழித்தனள். கணிகையர் குலத்தில் தோன்றிக் கட்டழகும் யௌவனமும் வாய்க்கப் பெற்றும் அரசகுமரனால் பல