பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 உரைநடைக் கோவை ளாகிய மெய்கண்டதேவர் முதலியோரால் அளவை நூன் முறையில் வைத்துப் பொருள் வரையறை செய்து அருளிச் செய்யப்பட்ட சிவஞானபோதம், சிவஞான சித்தி, திருமந்திரம் முதலிய சமயநூல்களும், சிவஞான முனிவரர், குமரகுருபர அடிகள் முதலியோர் அருளிய இனிய நூற்றொகைகளும், பிறவும் இதன்கண் உள்ளன. உருக்கரந்த நூல்களினின்றுஞ் சிதறுண்டு அங்கு மிங்குங் காணப்படும் சில செய்யுட்களைப் பார்க்குங் கால், முழுவுருவமுங் கிடைக்கப் பெறாமை தமிழரின் தவக்குறையென்றே இரங்க வேண்டியதாயிற்று. சேர பாண்டிய சோழர்களாகிய மூவேந்தர்களையும் தனித் தனியே தொள்ளாயிரம் வெண்பாக்களாற் புகழ்ந்து பாராட்டு முறையில் அமைந்த முத்தொள்ளாயிரச் செய்யுட்களிற் சிதறிக்கிடந்த சிலவற்றைக் கண்டதும் அந்நூன் முற்றும் பெறாமைபற்றி என் மனம் வருந்திய துண்டு. சிற்றுருவாகிய வெண்பாவில் உயர்ந்த பொருள்களைச் செப்பனிட்டமைத்துச் சொல்வளமும் பொருள் வளமுங் கெழுமப் பாடியிருக்கும் வனப்புத் தமிழ்ச்சுவை நலம் துய்ப்பார் யாவருள்ளத்தையுங் கவர வல்லதாம். "வெண்பாவிற் புகழேந்தி" என்று பாராட்டிய புலவர்க்கு இம் முத்தொள்ளாயிர நூல் காணப்பட்டில் தென்றே எண்ணுகின்றேன். "பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து என்று தமிழ் மடந்தையைப் புனைந்து பாராட்டிய புல் வரும் இதனைக் கண்டிலர். தென்னன் புகழின் மட்டில் அன்றி மூவேந்தர் புகழிலும் ஒருங்கு கிடந்தமை இங் நூலாற் கண்டிருப்பாராயின், "பொருப்பிலே பிறந்து