பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் மூவர் புகழிலே கிடந்து" என்று பாடி யிருப்பர். இன்னும், பூதங்களாலும் கால தத்துவத்தாலுங் கவரப் பட்டு ஒழிந்த சிறந்த நூல்களும் உரைகளும் பலவாம். 13 இலக்கண நூல்களுள் எழுத்து முதலிய ஐந்து இயல்களையும் முற்ற உரைப்பனவும், அவற்றுள் ஒன் றிரண்டே நுதலுவனவுமாகிய தொல்காப்பியம், இறை யனாரகப் பொருள், நன்னூல் முதலிய பலவுள்ளன. இவற்றுள் தொல்காப்பியத்தின் பெருமை மேற்கூறப் பட்டது கொண்டு ஒருவாறு உணரலாம். இனி,நூல்களின் உண்மைக் கருத்துக்களைத் தம் மதிநுட்பத்தாற் கண்டு உரைவரைந்த ஆசிரியர்களின் பெருமையை என்னென்பேன் ! இளம்பூரணர், பேரா சிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமே லழகர், அடியார்க்கு நல்லார் முதலிய ஆசிரியர்களின் திறமையைத் தனித்தனி விரிக்கப்புகின் மிக விரியும். இவரெல்லாம், மிக விரைவாக ஓடிச் செல்லும் ஒரு பேரியாற்றை எதிர்த்து நீந்தி அந்நீரோட்டத்தின் வன்மையை இற்றென உணர முற்படுவார் போலத், தாம் உரையெழுத மேற்கொண்ட சான்றோர் செய் யுட்களிலுள்ள சொற்களின் செலவை எதிர்த் தாராய்ந்து உண்மைப் பொருள்கண்டு உலகிற் குதவிய வராவர். பிற்காலத்தே பொதியிற் சாரலில் தென்றமிழ் நாடு செய்த தவப்பயனாகத் தோன்றிய மாதவச் சிவ ஞான முனிவரரின் மாட்சிமை கூறும் தரத்ததன்று. அம்முனிவர் பெருமான் வடமொழி தென் மொழி