பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் பிறவுமாம். வேற்று மொழியாளர் அறியாமையால் நம் தக்கவாறு மொழியைப் பழித்துரைப்பாராயின் ஏதுக்களைக் காட்டி உண்மைநிலை யுரைத்து அவரை நன்னெறிப் படுத்த முயலல் வேண்டும். அந்நெறிக்கு வாராராயின் "நெறியினீங்கியோர் நீரல கூறின், அறி யாமையென்றறிதல் வேண்டும்" என்றாங்கு அவர் தன் மைக்கு இரங்கியொழிதலே நாம் மேற்கொள்ளற்பால் தாம். இங்ஙன மல்லாமல் நாமும் அவரியல்பைக் கைப் பற்றி அவர் மொழிக்கண் இல்லாத குறைகளை ஏறிட்டுப் பழித்துரைத்தல் நடுநிலை திறம்பாத் தமிழ்க் குடியிற் பிறந்த நமக்கு ஒல்லாத தொன்றாம். கலாம் விளைத்த லால் எய்தும் பயன், நடுநிலை திறம்பா நன்னெஞ்சைக் கோட்டமுறச் செய்தலே யன்றிவேறின்று. மொழியளவி லன்றிச் சமய நிலையிலும் இம் முறை மேற் கொள்ளற் பாலதொன்றாம். காய்தல் உவத்த லின்றி உண்மை நிலை கடைப்பிடித்துப் பண்டை நிகழ்ச்சி களை யாராய்ந்து வெளியிடும் இக்காலத்துத் தமிழ்ப் புலவர்களின் அருஞ் செயல்கள் போற்றற்பாலனவாம். புதிய முறையிற் கண்ட கொள்கைகளுள், பொருந்து வன இன்ன, பொந்தாதன இன்னவென்று அறுதி வெளிப்படுத்தற்குரிய வழியைப் பின்னர்க் யிட்டு கூறுவேன். 4. தமிழ் மொழியின் நிலைமை தமிழ்ச் செல்வர்காள்! 17 இதுகாறுங் கூறியவாற்றால் தமிழின் தொன்மை யுஞ் சிறப்பும் ஒருவாறு புலப்படுமேயன்றி முற்ற வெடுத்து விளக்கப்பட்டனவாகா.தாலீ புலாக நியாய மாகச் சுருங்கியநிலையிற் சில எடுத்துக்காட்டப்பட்டன. 2