பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உஸ்ரஈடைக் கோவை இம் பயிற் இனி, இத்தகைய மூலப் பொருளாகிய தமிழின் நிலை இக்காலத்தில் எங்ஙனம் உள்ளதென்று ஆராயப் புகு வோமாயின், அது வருத்தந் தருவதொன்றாகும். மொழியை முறையாகப் பயில்வாருஞ் சிலரே. றுங் கல்லூரிகளுஞ் சிலவே. நம் அரசினர் மொழி யாகிய ஆங்கிலத்தால் நெருக்குண்டு இது தன்னுருக் கரந்து அங்குமிங்குஞ் சிறிது உறைவிடம் பெற்று ஒல்கியிருக்கின்றது. போற்றுவா ரின்மையால் வேற் றிடம் பெயர்தற்கும் வழியில்லை. ஆர்வமிக்குப் பயில முயல்வாரும் பொருள் வருவாயைக் கருதிப் பின்வாங்கு கின்றனர். பொருள் வருவாயைப் பொருட்படுத்தாத தகுதியுடையார்க்கு இதன்கண் விருப்பமுண்டாதல் அரிதாகின்றது. இளைஞர் சிலர்,காலத்தின் விரைவிற் கேற்றவாறு ஒரு நூலையேனும் அழுந்தி யாராயாமல் நுனிப்புல் மேய்ந்து இக்கால நாரிகத்திற்கு ஒத்த வண்ணம் எங்கணும் உலாவித் திரியும் பத்திரிகை களில் வெளிப்படுஞ் சில கட்டுரைகளைப் பயின்று, அம் முறையிற் காலங்கழிக்க எண்ணுகின்றனர். பண்டைக் காலம்போலக் கற்றுவல்ல பெரும் புலவர்கட்கு முற்றூட்டாக நிலம் பொருள் முதலியன கொடுத்துப் பேணும் புரவலரும் இலர். ஆரவார மின்றி அறிவு விளக்கங் கருதிக் கல்வி பயின்று அடக்க மேற் கொண்டொழுகுவாரைப் பெருமைப் படுத்துவாரும் சுருங்கினர். போலிப் பயிற்சியும் போலியறிவும் அப்போலியறிவுடையாரைப் பாராட்டு தலுமே எங்கணும் மல்கின.